லோக்சபாவில் நடந்தது என்ன? மனோரஞ்சன் எங்கிருந்தார்? பார்வையாளர் மாடத்தில் இருந்த சாட்சி பேட்டி
டெல்லி: லோக்சபாவில் அத்துமீறி நுழைந்து ஷூவில் இருந்த கலர் பொடியை தூவிய போது எம்பிக்கள் மனோரஞ்சனை சுற்றி வளைத்தனர் என பார்வையாளர் மாடத்தில் நேரில் பார்த்த மோகன் தானப்பா தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் நடந்த சம்பவம் குறித்து பெங்களூரை சேர்ந்த மோகன் தானப்பா செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து பார்வையாளர் மாடத்தில் இருந்த மோகன் தானப்பா கூறியிருப்பதாவது: நாங்கள் காலரி எண் 1 இல் இருந்தோம். மனோரஞ்சன் காலரி எண் 2 இருந்தார். லோக்சபாவில் நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென மனோரஞ்சன் காலரியிலிருந்து எகிறி குதித்து டேபிள் டேபிளாக தாவினார்.

உடனே தனது ஷூவில் மறைத்து வைத்திருந்த குப்பியை திறந்து அதில் இருந்த வண்ண பொடியை ஸ்பிரே செய்தார். உடனே மற்ற எம்பிக்களும் பாதுகாப்பு அதிகாரிகளும் அவரை சுற்றி வளைத்தனர். அப்போது அந்த நபர் ஏதோ சப்தம் போட்டார். அது என்ன என எனக்கு கேட்கவில்லை. பல எம்பிக்களின் கூக்குரல் கேட்டது என மோகன் தானப்பா தெரிவித்தார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதலின போது வீரமரணம் அடைந்தவர்களுக்கு இன்று புதிய நாடாளுமன்றம் கூடியதும் மரியாதை செலுத்தப்பட்டது.
அப்போது மக்களவை நடைபெற்றுக் கொண்டிருந்தது. திடீரென பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் அவைக்குள் குதித்தனர். இருவரில் ஒருவர் சபாநாயகர் நோக்கியும் மற்றொருவர் நாடாளுமன்ற வளாகத்தின் மேஜை மீது ஏறியும் களேபரம் செய்தனர்.
மேஜை மீது குதித்து ஓடியவரை எம்பிக்கள் சுற்றி வளைத்து எம்பிக்கள் சுற்றி வளைத்த போது ஜீன்ஸ் அணிந்து சென்ற நபர் தான் ஷூவில் மறைத்து வைத்திருந்த வண்ண புகைப் பட்டாசுகளை வீசினார். இதையடுத்து அத்துமீறிய இருவரையும் காவலர்கள் பிடித்து வெளியேற்றினர். அவர்களிடம் இருந்து வண்ணப் புகைப்பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மைசூர் எம்பி பிரதாப் சிம்ஹாவிடம் இருந்து பாஸ் வாங்கிக் கொண்டு பார்வையாளர் மாடத்திற்கு வந்ததாக தெரிகிறது. மேலும் 5 இடங்களில் பாதுகாப்பு சோதனைகளை தாண்டி இவர்கள் ஷூவில் கலர் பாமை மறைத்து கொண்டு வந்தது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அப்படியென்றால் நாளை துப்பாக்கி, கத்தி கூட யாராவது எடுத்து வந்தால் அவர்களையும் விட்டுவிடுவார்களா என எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications