உயிருக்கோ, உடமைக்கோ பாதிப்பு ஏற்படாமல்.. விவசாயிகள் போராட உரிமையுள்ளது.. உச்சநீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விவசாயிகள் போராட சட்டப்படி உரிமை உள்ளது, ஆனால், யாருடைய உயிரோ.. அல்லது உடமைகளுக்கோ பாதிப்பு ஏற்படாமல் போராட்டம் இருக்க வேண்டியது அவசியம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Recommended Video

    கொட்டும் பனி.. தொடரும் மனஉறுதி… 22வது நாளை எட்டியது விவசாயிகளின் போராட்டம்..!

    விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 23வது நாளை எட்டியுள்ளது.

    Farmers have a legal right to protest: Supreme court

    இதுவரை மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை. விவசாயிகள் போராட்டம் தொடர்பாக நிறைய மனுக்கள் பல தரப்பினரால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சார்பில் அட்டார்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால், ஆஜராகி, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தங்கள் தரப்பு பதிலை தாக்கல் செய்வதாக அறிவித்தார்.

    Farmers have a legal right to protest: Supreme court

    அப்போது குறுக்கிட்ட போப்டே, ஒரு சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த உரிமையுள்ளது. அதை தடுப்பது பற்றி பேச்சு இல்லை. ஆனால், யாருடைய உயிர் அல்லது உடமைக்கும் சேதமில்லாத வகையில் அது இருக்க வேண்டும் என்றார்.

    மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே வாதிடுகையில், போராட்டக்காரர்கள் வெறுமனே போராட்டமே செய்து கொண்டிருக்க கூடாது. ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும் என்றார். அப்போது தலைமை நீதிபதி பாப்டே கூறுகையில், நாங்களும் அதைத்தான் சொல்கிறோம்.. போராட்டக்காரர்களின் தேவைகள் வன்முறையில்லாத வகையில் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும். போராட்டங்கள் விஷயம் சார்ந்ததாக இருக்க வேண்டும். பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிவகை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

    Farmers have a legal right to protest: Supreme court

    டெல்லி அரசு சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜரானார். அவர் தனது வாதத்தில், "சட்டத்தில் ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டு வந்தால், சட்டமே காணாமல் போய்விடும். விவசாயிகளுக்கு விவசாய சட்டங்களில் உடன்பாடு இல்லலை. எனவே, புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும். நாடாளுமன்றத்தில் அது விவாதிக்கப்பட வேண்டும் என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+