அந்த வீடியோவால் திருப்பம்... காசிப்பூரில் திரண்டு வரும் பல்லாயிரம் விவசாயிகள்.. மிரளும் போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விவசாய சங்க தலைவர் வெளியிட்ட உருக்கமான வீடியோவால் பொங்கி எழுந்த உத்தரப்பிரதேச விவசாயிகள், வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியை ஒட்டியுள்ள காசிப்பூரில் பல்லாயிரம் விவசாயிகள் திரண்டனர்.

போராட்டம் நடத்தி வரும் இடத்தை காலி செய்ய வேண்டும் என்ற மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளை நிராகரித்த விவசாயிகள், இன்று ஒரு நாள் உண்ணாவிரதத்தை கடைபிடிக்க போவதாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து காசிப்பூரில் விவசாயிகள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டிராக்டர் பேரணி வன்முறையால் பிசுபிசுத்த விவசாயிகள் போராட்டம், விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகாயிட் வெளியிட்ட உருக்கமான வீடியோவிற்கு பிறகு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

 கெடு விதிப்பு

கெடு விதிப்பு

உத்தரப்பிரதேச எல்லையான காசிப்பூரில் ஏராளமான விவசாயிகள் திரண்டுள்ளனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து கெடு விதித்து இருந்தது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் உள்ள பகுதிக்கு மின்சார விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டது. மேலும் அப்பகுதியில் கூடுதல் போலீஸ் படை குவிக்கப்பட்டது.

விலகிய போலீஸ் படை

விலகிய போலீஸ் படை

இதனிடையே விவசாயிகள் அதிக அளவில் திரண்ட நிலையில் நேற்று முதல் மாநில போலீசார் மற்றும் அதிரடி விரைவு படையினர் உள்ளிட்ட கூடுதல் படையினர் விலக்கி கொள்ளப்பட்டனர். இதற்கிடையே போராட்ட களததிற்கு வரும்படி விவசாயிகளுக்கு விவசாய சங்க தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.

காசிப்பூர் போராட்டம்

காசிப்பூர் போராட்டம்

இதையடுத்து உத்தரப்பிரதேசத்தின் மீரட், பாக்பத், பிஜ்னூர், முசாபர்நகர், மொரதாபாத், புலந்த்சாகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் டெல்லியை நோக்கி குவிய தொடங்கினர். அனைவரும் காசிப்பூருக்கு வந்து கொண்டிருப்பதால் அங்கு மிகப்பெரிய அளவில் கூட்டம் அதிகரித்து வருகிறது. அங்கு 2வது நாளாக போராட்டம் மிகப்பெரிய அளவில் தொடர்கிறது..

வலிமை பெறும்

வலிமை பெறும்

இந்நிலையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்கள், இன்று மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு 'சத்பவ்னா திவாஸ்' அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இதன்படி இன்று ஒரு நாள் உண்ணாவிரதம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். வரப்போகும் நாட்களில் அதிகமான விவசாயிகள் அவர்களுடன் சேருவதால் விவசாயிகளின் போராட்டம் வேகத்தையும் வலிமையையும் பெறும் என்று விவசாய சங்கத்தினர் கூறியுள்ளனர்.

மஹாபஞ்சாயத்து

மஹாபஞ்சாயத்து

குடியரசு தின வன்முறையைத் தொடர்ந்து போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தில் சேர ஹரியானா மற்றும் பஞ்சாபிலிருந்து விவசாயிகளை அதிக எண்ணிக்கையில் டெல்லியின் எல்லைகளை நோக்கி அணிதிரட்டத் தொடங்கியுள்ளனர். குடியரசு தின வன்முறைக்கு பின்னர் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முசாபர்நகரில் நடந்த விவசாயிகளின் மஹாபஞ்சாயத்துக்கு பின்னர் காசிப்பூர் எல்லையை நோக்கி ஏராளமானோர் குவிய தொடங்கினர். இதுவே போராட்டம் மீண்டும் வலுப்பெற காரணமாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+