லோக்சபா தேர்தல்.. இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நிறைவு.. மொத்தமாக 66.36% வாக்குகள் பதிவு!
டெல்லி: 7 மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் இறுதி கட்ட வாக்குப் பதிவு காலை 7 மணி தொடங்கிய நிலையில் மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இதில் 62.87% வாக்குகள் பதிவாகி உள்ளது. மொத்தமாக அனைத்து கட்டங்களையும் சேர்த்து 66.36% வாக்குகள் பதிவாகி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது.

இந்த நிலையில் மொத்தமுள்ள 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களுக்கு தேர்தல் நடைபெற்று வந்தன. இன்றைய தினம் பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் விடுபட்ட தொகுதிகளுக்கும் சண்டீகர் யூனியன் பிரதேசத்துக்கும் இன்று வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. இது மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.
மொத்தம் 59 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் சில மாநிலங்களில் மாலை 4 மணிக்கே தேர்தல் முடிவடைந்தது. பீகாரில் உள்ள சில தொகுதிகளிலும் ஜார்க்கண்டில் உள்ள சில தொகுதிகளிலும் உ.பி.யில் உள்ள சில தொகுதிகளிலும் மாலை 4 மணிக்கே தேர்தல் முடிவடைந்தது.
இதில் மொத்தமாக 62.87% வாக்குகள் பதிவாகி உள்ளது. உத்தர பிரதேசத்தில் 57.86% வாக்குகள் பதிவாகி உள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் 67.89% வாக்குகள் பதிவு பதிவாகி உள்ளது. மொத்தமாக அனைத்து கட்டங்களையும் சேர்த்து 66.36% வாக்குகள் பதிவாகி உள்ளது.
கடைசி கட்ட தேர்தலில் ஜார்க்கண்டில் 71.16% வாக்குகள் பதிவு பதிவாகி உள்ளது.சண்டிகரில் 63.57% வாக்குகள் பதிவு பதிவாகி உள்ளது. பஞ்சாப்பில் 62.45% வாக்குகள் பதிவு பதிவாகி உள்ளது.
மேற்கு வங்கத்தில் 73.51% வாக்குகள் பதிவு பதிவாகி உள்ளது. பீகாரில் 53.81% வாக்குகள் பதிவு பதிவாகி உள்ளது மத்திய பிரதேசத்தில் 71.44% வாக்குகள் பதிவு பதிவாகி உள்ளது.
இதில் மிக முக்கியத் தொகுதியாக பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதிக்கும் இன்று தான் தேர்தல் நடைபெற்றது. வரும் 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கேதார்நாத் சென்று அங்குள்ள குகையில் இன்று காலை வரை தியானத்தில் இருந்தார். இவரது பிரார்த்தனை கைகொடுக்குமா என்பது 23-ஆம் தேதி தெரிந்துவிடும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications