"ஆணுறைகள்.." மறைந்திருக்கும் பெரிய ஆபத்து.. இளசுகளே ஜாக்கிரதையா இருங்க.. வந்தது புது வார்னிங்
டெல்லி: திட்டமிடாத கர்ப்பம், பாலியல் நோய்கள் பரவுவதைத் தடுக்க ஆணுறைகள் பயன்படுவது அனைவருக்கும் தெரியும். ஆனால், இப்போது இந்த ஆணுறைகளால் ஒரு மோசமான பாதிப்பு ஏற்படும் சூழலும் உருவாகி உள்ளது.
பாலியல் சார்ந்த நோய்கள் ஒரு காலத்தில் மிக வேகமாகவும் அதிகமாகவும் பரவி வந்தது. அதைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. பாலியல் நோய்களைத் தடுப்பதில் ஆணுறைகளுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது.
பாலியல் சார்ந்த நோய்கள் மட்டுமின்றி திட்டமிடாத கர்ப்பம் உள்ளிட்டவற்றைத் தடுப்பதிலும் ஆணுறைகள் பெரியளவில் பயன் தருகிறது. இதற்கிடையே ஆணுறைகளால் இளசுகள் ஒரு மோசமான பாதிப்பு ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது.

ஆணுறைகள்: இளசுகள் மத்தியில் இப்போது Flavoured condoms என்ற சுவையூட்டப்பட்ட ஆணுறைகள் பிரபலமாகி வருகிறது. இதன் விற்பனையும் டெல்லி உள்ளிட்ட சில இடங்களில் மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளது. ஆனால், இது எதற்காகத் தயாரிக்கப்படுகிறதோ, அதைத் தாண்டி மற்றொரு காரணத்திற்காக இதை இளைஞர்கள் வாங்கிக் குவித்து வருகிறார்கள்.
அதாவது இந்த சுவையூட்டப்பட்ட ஆணுறைகளால் இளைஞர்கள் போதையாகிறார்கள்.
குறிப்பாக மேற்கு வங்கத்தில் இளைஞர்களை இதைப் போதைக்காகப் பயன்படுத்தும் பழக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த போதைக்கு அவர்கள் அதிகம் அடிமையாகி, அடிக்கடி பயன்படுத்தும் சூழலுக்கும் தள்ளப்படுகிறார்கள். சாக்லேட், ஸ்ட்ராபெரி, ஆப்பிள், எனப் பல சுவைகளில் சுவையூட்டப்பட்ட இந்த ஆணுறைகள் எளிதாக அனைத்து மருந்தகங்களிலும் கிடைக்கிறது. இதனால் இதைக் கண்காணிப்பதோ அல்லது கட்டுப்படுத்துவதே சிரமமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
12 மணி நேரம் போதை: துர்காபூரில் உள்ள கல்லூரி மாணவர்கள் இந்த ஆணுறைகளை ஒரு விதத்தில் போதை ஏற்ற பயன்படுத்துகிறார்கள். இந்த வகை ஆணுறைகளை நீரில் போடும் அவர்கள், ஒரு வித செயல்முறையைப் பின்பற்றுகிறார்கள். அதன் பிறகு அந்த தண்ணீரைக் குடித்து போதையாகிறார்கள். இதன் மூலம் அவர்களால் குறைந்தது 10-12 மணி நேரம் போதையிலேயே இருக்க முடிகிறதாம்...
இது குறித்து மருந்தக உரிமையாளர் ஒருவர் கூறுகையில், "முன்பு, தினமும் மூன்று முதல் நான்கு பாக்கெட் ஆணுறைகள் விற்பனையாகும். ஆனால், இப்போது அனைத்தும் காலியாகி வருகிறது. இளைஞர்கள் போதைக்காக இதைப் பயன்படுத்துகிறார்களா என எங்களுக்குத் தெரியாது" என்றார்.
எப்படி: இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "ஆணுறை சிறப்பாக இருக்க வேண்டும் என அதன் நீட்டிப்பு தன்மையை அதிகரிக்க பாலியூரிதீன் என்ற ஒரு செயற்கை பிசின் அதில் பயன்படுத்தப்படும்.. இதில் தான் நறுமணமும் இருக்கும். இதுதான் போதையையும் தருகிறது" என்றார். பாலியூரிதீன் என்பது கட்டுமான பொருட்கள், கார் பாகங்களில் பயன்படுத்தப்படும் ஒரு பிளாஸ்டிக் பொருளாகும். இதைத் தான் சில செயல்களைச் செய்து சூப்பர் போதை தரும் பொருளாக இளைஞர்கள் மாற்றுகிறார்கள்.
இதில் உருவாகும் எத்திலீன் கிளைகோல் அதிகபட்சம் 12 மணி நேரம் வரை போதை தரும். இருப்பினும், அவை உயிருக்கு ஆபத்தானவை.. சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலும் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்" என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
பாதிப்புகள்: இதைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தினால் உடல்நிலை பாதிப்பு மட்டுமின்றி மன ரீதியான பாதிப்பும் ஏற்படும். மற்றவர்களுடன் பேசுவது உள்ளிட்ட அடிப்படை விஷயங்களிலேயே பிரச்சனை ஏற்படும். அனைத்து தரப்பினரும் இதில் பாதிக்கப்படலாம் என்றாலும் இளைஞர்களுக்கு பாதிப்பு அதிகம். இது அவர்களின் வாழ்க்கையே நாசம் செய்துவிடும்.
சரி செய்யவே முடியாத பாதிப்புகளையும் மூளையில் ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது மட்டுமின்றி கற்றலில் சிக்கல், எச்ஐவி போன்ற நோய்கள், எமோஷ்னல் பாதிப்புகளும் ஏற்படும் ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications