‛குவியும் அழைப்பு’.. மீண்டும் பாஜக ஆட்சி தான்! உறுதி செய்த வெளிநாடுகள்! பிரதமர் மோடி உடைத்த ரகசியம்
டெல்லி: டெல்லியில் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது இந்தியாவில் மீண்டும் நம்முடைய ஆட்சி தான் வரும் என வெளிநாடுகளே உறுதி செய்துவிட்டதாக கூறி முக்கிய ரகசியத்தை அவர் உடைத்தார். இந்த பேச்சு பாஜகவினரை உற்சாகமடைய செய்தது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக கடந்த 2014ல் மத்தியில் ஆட்சியை பிடித்தது. அதன்பிறகு 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வென்றது. பிரதமராக 2வது முறையாக மோடி பதவியேற்று செயல்பட்டு வருகிறார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதனால் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 370 தொகுதிகளிலும், பாஜகவின் என்டிஏ எனும் இந்திய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்து பாஜக வேலை செய்து வருகிறது. இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவது தொடர்பாக பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது.
இந்த கூட்டத்துக்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமை வகித்தார். காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை அனைத்து மாநிலங்களை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
நேற்று தொடங்கிய இந்த கவுன்சில் கூட்டம் இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் தான் நிறைவு நாளான இன்று பிரதமர் மோடி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் நாம் வெற்றி பெறுவோம் என்று உலகமே அறிந்துள்ளது எனக்கூறினார். மேலும் அதன் பின்னணி ரகசியம் பற்றியும் அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
இன்னும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவில்லை. ஆனால் வெளிநாடுகளில் இருந்து ஜுலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான அழைப்பிதழ்கள் வந்துவிட்டன. இதன் அர்த்தம் என்ன? வெளிநாடுகளுக்கே தெரிந்துவிட்டது இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமையப்போகிறது என்று. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று மத்தியில் 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் என்பதை உலகமே அறிந்து இருப்பதை காட்டும் வகையில் தான் இந்த அழைப்புகள் உள்ளன'' என்றார். அதாவது மீண்டும் பிரதமாக மோடி தான் வருவார் என வெளிநாடுகள் அறிந்துள்ளன. இதனால் வரும் மாதங்களில் தங்கள் நாடுகளுக்கு வர வேண்டும் என பிற நாட்டு தலைவர்கள் அழைத்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேலும் இந்த வேளையில் காங்கிரஸ் கட்சியையும் அவர் விமர்சனம் செய்தார். அப்போது, ‛‛இன்றைய சூழலில் எதிர்க்கட்சி தலைவர்களே பாஜக 400 இடங்களில் வெல்லும் என கூறுகின்றனர். இதனால் என்டிஏ எனும் நமது கூட்டணியை 400 இடங்களிலும், பாஜகவை 370 இடங்களில் வெற்றி பெற செய்ய வேண்டும். காங்கிரஸ் மிகப்பெரிய பாவத்தை செய்து வருகிறது. அந்த பாவம் என்னவென்றால் நம் நாட்டின் பாதுகாப்பு படை வீரர்களின் மனஉறுதியை உடைப்பதாகும். பிரதமராக நான் முதல் முறையாக பதவியேற்ற போது நடந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மற்றும் பாலகோட் தாக்குதல் பற்றி கேள்வியெழுப்பி பாதுகாப்பு படையினரின் செயல்பாட்டை சந்தேகம் கிளப்பியது. மேலும் ரபேல் விமானம் பற்றியும் தவறான தகவல்களை பரப்பியது'' என விளாசினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications