பாஜகவில் ஐக்கியமாகும் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன்.. டெல்லியில் ட்விஸ்ட்!
டெல்லி: அதிமுகவின் முன்னாள் எம்பி மைத்ரேயன் பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இருந்து வந்தாலும் கூட, கடந்த சில காலமாகவே இரு தரப்பிற்கும் இடையே வார்த்தை மோதல் அதிகரித்தே வந்தது. பாஜகவில் இருந்து பலரும் விலகி அதிமுகவில் ஐக்கியமாகி வந்தனர்.
இதனால் கூட்டணியில் சிக்கல் எழுந்தது. இரு கட்சிகளிலும் இருக்கும் தலைவர்களும் மாறி மாறி விமர்சித்தும் வந்தனர். தற்போது தான் அந்த நிலைமை சற்று அமைதியாகி இருக்கிறது.

இந்தச் சூழலில் அதிமுகவின் முன்னாள் எம்பி மைத்ரேயன் பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அவர் தன்னை பாஜகவில் அடிப்படை உறுப்பினராகவே இணைத்துக் கொள்கிறார். கட்சியில் சேர்ந்த உடன் அவருக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படாது என்றே தெரிகிறது.
பாஜகவில் இணைந்த பிறகு அவர் பாஜக தேசிய தலைவர் நட்டா மற்றும் தமிழக பாஜக தலைவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. மைத்ரேயன் கடந்த அக். 9ஆம் தேதி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மைத்ரேயன் அதிமுகவில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வானவர் என்ற போதிலும், அவர் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியது என்னவோ பாஜகவில் இருந்து தான். முதலில் பாஜகவில் இருந்த அவர் அங்கே மாநில தலைவராகவும் இருந்தவர்.
2000ஆம் ஆண்டு அவர் பாஜகவில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாக இருந்த போது, ஓபிஎஸ் அணிக்கு முதலில் சென்றவர், அதன் பிறகு எடப்பாடி அணிக்கு மீண்டும் திரும்பினார்,
கடைசியாக மீண்டும் எடப்பாடி அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு ஐக்கியமானவர். அதைத் தொடர்ந்து அவரை அதிமுகவில் இருந்து நீக்குவதாக எடப்பாடி கடந்தாண்டு அக். மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications