Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“மினி” ஜி20.. இன்று இந்தியாவில் தொடங்குகிறது வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு! சீனாவும் வருதாம்

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கின் காங் இந்தியா வரவுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்த ஆண்டு ஜி20 கூட்டமைப்புக்கு தலைமை தாங்கும் இந்தியாவில் அதில் இடம்பெற்ற நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்துகொள்ளும் மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

அமெரிக்கா, பிரிட்டன், சீனா, கனடா, ஆஸ்திரேலியா, இந்தியா, ரஷியா, தென் ஆப்பிரிக்கா,சவூதி அரேபியா, துருக்கி, அர்ஜெண்டினா, பிரேசில், மெக்சிகோ, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இந்தோனேசியா, தென் கொரியா ஆகிய நாடுகளை கொண்ட உலகின் சக்திவாய்ந்த கூட்டமைப்பாக ஜி20 உள்ளது.

G 20 கூட்டமைப்பு நாடுகளின் 17 வது உச்சி மாநாடு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் இறுதியில் இந்தியாவிடம் ஜி 20 நாடுகள் குழுவின் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

தலைவரான இந்தியா

தலைவரான இந்தியா

ஒவ்வொரு ஆண்டும் இந்த கூட்டமைப்பில் இருக்கும் ஒரு நாடு இதன் தலைமை பதவியை ஏற்கும் நிலையில், 2022 ஆம் ஆண்டு இந்தோனேசியாவுக்கு தலைமை பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டின் தலைமை பதவியை ஜி 20 நாடுகளின் மாநாட்டின் முடிவில் இந்தோனேசிய அதிபர், பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார்.

 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு

வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு

இதனை அடுத்து 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் ஜி 20 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தற்போதே மத்திய அரசு தொடங்கி உள்ளது. இந்த நிலையில் இன்று ஜி20 நாடுகளில் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. உக்ரைன் - ரஷியா இடையிலான போர் தொடங்கி ஓராண்டு கடந்துள்ள நிலையில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.

2 நாள் மாநாடு

2 நாள் மாநாடு

இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெற இருக்கும் மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ரஷியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் வாவ்ரோவ் உள்ளிட்ட ஜி20 நாடுகளின் அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள். இலங்கை, வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகள் கூட்டமைப்பில் இல்லாதபோதிலும் இந்தியாவின் அழைப்பை ஏற்று அந்த நாடுகளில் அமைச்சர்களும் இந்த மாநாட்டிற்கு வருகின்றனர்.

சிறப்பு நிகழ்ச்சிகள்

சிறப்பு நிகழ்ச்சிகள்

முதல் நாளான இன்று உலக நாடுகளின் அமைச்சர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க மத்திய அரசு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து இருக்கிறது. நாளை குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

பணவீக்கம், சர்வதேச பொருளாதார நெருக்கடி, உணவு, எரிபொருள், உரம் விலை உயர்வு, சரக்கு, சேவைகளின் தேவை குறைந்து வருவது போன்றவற்றுக்கு தீர்வு காண்பது குறித்து அமைச்சர்கள் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் பன்னாட்டு நட்புறவு, பயங்கரவாத தடுப்பு, உணவு, எரிசக்தி பாதுகாப்பு, பேரிடர் உதவி குறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 நிதியமைச்சர்கள் மாநாடு

நிதியமைச்சர்கள் மாநாடு

பெங்களூருவில் ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் கலந்துகொண்ட மாநாடு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது உக்ரைன் விவகாரம் தொடர்பாக மேற்கத்திய நாடுகளின் அமைச்சர்கள் கேள்வி எழுப்பியதற்கு ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஏதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கூட்டறிக்கை ஏதும் வெளியாகவில்லை.

உக்ரைன் - ரஷியா விவகாரம்

உக்ரைன் - ரஷியா விவகாரம்

இந்த நிலையில் இன்று நடைபெறும் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாட்டின் முடிவில் கூட்டறிக்கை வெளியிட இந்தியா திட்டமிட்டு இருக்கிறது. இந்த மாநாட்டிலும் உக்ரைன் - ரஷியா போர் விவகாரம் குறித்து விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கின் காங் இந்தியா வரவுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+