Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லோயர் பெர்த் இனி இவங்களுக்கும்.. ஆட்டோமெட்டிக்காவே சீட் கிடைக்கும்.. ரயில்வே புது ரூல்ஸ்.. மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பொதுமக்களின் வசதிக்காக எத்தனையோ அறிவிப்புகளை ரயில்வே நிறுவனம் கொண்டுவந்துள்ள நிலையில், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிகளுக்காக மற்றொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன? அதன் சிறப்பம்சங்கள் என்ன? இதனை சுருக்கமாக பார்க்கலாம்.

லட்சக்கணக்கான மக்களுக்கு ரயில் போக்குவரத்து இன்றியமையாத தேவையாக உள்ளது.. இதனால் ஏராளமான ரயில்கள் விடப்பட்டுள்ளது என்றாலும், தொலைதூர பயணமாக செல்பவர்களுக்கு, லோயர் பெர்த்கள் அவ்வளவாக கிடைப்பதில்லை.

lower berth Train Indian railways

குறிப்பாக, மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த லோயர் பெர்த் என்பது சரியாக கிடைப்பதில்லை.. அதனால்தான், இந்திய ரயில்வே மிகப்பெரிய மாற்றத்தை தற்போது கொண்டு வந்துள்ளது.

கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள்

மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் டிக்கெட் ரிசர்வ் செய்யும்போது லோயர் பெர்த் ஆப்ஷனை தராவிட்டாலும்கூட, அவர்களுக்கு லோயர் பெர்த் ஒதுக்கும் வகையில் புதிய விதிமுறையை கொண்டு வரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் ஒரு கேள்விக்கு பதில் அளித்து பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ''ரயில்வே முன்பதிவு முறை இப்போது மூத்த குடிமக்கள், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண் பயணிகள், கர்ப்பிணிகள், தகுதியான பயணிகளுக்கு கீழ் பெர்த்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. அத்துடன், லோயர் பெர்த்களை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் சிறப்பு வசதியையும் ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

பெண்களுக்கான லோயர் பெர்த் வசதி

முன்பதிவு செய்யும் போது இவர்கள் ஒரு குறிப்பிட்ட லோயர் பெர்த் தேர்வு செய்யாவிட்டாலும், கிடைக்கும் தன்மையைப் பொறுத்து கீழ் பெர்த்களைப் பெறலாம். இந்த புதிய விதிகளின்படி இனிமேல் ரயில்வேயில் லோயர் பெர்த்கள் காலியாக இருந்தால் அவை மூத்த குடிமக்கள், பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.

இது ரயில்வேயின் தானியங்கி முறையாகும். ஸ்லீப்பர் வகுப்பு ஒவ்வொரு பெட்டியிலும் 6 முதல் 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், AC-3 வகுப்பில் 4 முதல் 5 இடங்களும், AC-2 வகுப்பில் 3 முதல் 4 லோயர் பெர்த்கள் சிறப்பு தேவை இருக்கும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த வசதி ரயிலில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். அதிகபட்ச பயணிகள் பலன் பெற ரயில்வே முயற்சிக்கிறது. மெயில்-எக்ஸ்பிரஸ், ராஜதானி மற்றும் ஷதாப்தி ரயில்களில் திவ்யாங் ரயில் பயணிகளுக்கும் இந்த ஒதுக்கீடு முறையே பின்பற்றப்படுகிறது

12 ஸ்லீப்பர், 8 பொதுப்பெட்டி

முன்னதாக, வேறு ஒரு கேள்விக்கு பதிலளித்த அஸ்வினி வைஷ்ணவ், "குறைந்த கட்டணத்தில் உயர்தர ரயில் சேவைகளை வழங்க அமிர்த பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இவை AC அல்லாத ரயில்கள் ஆகும். இந்த ரயில்களில் 12 ஸ்லீப்பர் வகுப்பு மற்றும் 8 பொது வகுப்பு பெட்டிகள் உள்ளன. குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு இது பேருதவியாக இருக்கும். இந்த ரயில்களிலும் நாங்கள் பல நவீன வசதிகளை கொண்டு வந்துள்ளோம். குறைந்த கட்டணத்தில் பயணிகள் வசதியாக பயணிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+