தமிழகம், மேற்கு வங்கம் உட்பட.. 8 மாநில ஆளுநர்கள் மாற்றம்! புதிய கவர்னர்கள் நியமனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. மட்டுமல்லாது நாளையும், நாளை மறுநாளும் குடியரசுத் தலைவர் மேற்கு வங்க மாநிலத்திற்கு பயணம் செய்ய இருக்கிறார். இந்த நிலையில், அம்மாநில ஆளுநர் ஆனந்த போஸ் திடீரென ராஜினாமா செய்திருக்கிறார். அதேபோல தமிழகம் உட்பட 8 மாநில ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இது குறித்து குடியரசுத்தலைவர் அலுவலகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

West Bengal Governor Resigns Suddenly
  • கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பார்.
  • டெல்லியின் துணை நிலை ஆளுநராக இருந்த வினய் குமார் சக்சேனா, லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தரஞ்சித் சிங் சந்து, தில்லியின் புதிய துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இமாச்சலப் பிரதேச ஆளுநராக இருந்த சிவ பிரதாப் சுக்லா, தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தெலுங்கானா ஆளுநராக இருந்த ஜிஷ்ணு தேவ் வர்மா, மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நந்த் கிஷோர் யாதவ், நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) சையத் அட்டா ஹஸ்னைன், பீகார் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • லடாக்கின் துணை நிலை ஆளுநராக இருந்த கவிந்தர் குப்தா, இமாச்சலப் பிரதேச மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேற்கு வங்கத்தின் ஆளுநராக இருந்த ஆனந்த போஸ், கேரள மாநிலத்தை சேர்ந்தவர். கேரளாவிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால், அங்கு போட்டியிடுவதற்காக ஆளுநர் பதவியிலிருந்து ஆனந்த போஸ் ராஜினாமா செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், குடியரசுத் தலைவர் ஒரு மாநிலத்திற்கு வருகிறார் எனில் அவருக்கு ஆளுநர் நேரில் சென்று வரவேற்பு கொடுப்பார். நாளையும் நாளை மறுநாளும் குடியரசுத் தலைவர் மேற்கு வங்கம் செல்ல இருக்கையில், இந்த இரண்டு நாட்கள் காத்திருந்து ராஜினாமா செய்திருக்கலாமே என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.

இது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது x பக்கத்தில், "மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸின் திடீர் ராஜினாமா செய்தியைக் கேட்டு நான் அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளேன்.

அவரது இந்த ராஜினாமாவிற்குப் பின்னால் உள்ள காரணங்கள் தற்போது எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், நிலவி வரும் சூழல்களைக் கருத்தில் கொள்ளும்போது, வரவிருக்கும் மாநிலச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சில அரசியல் நலன்களுக்காக மத்திய உள்துறை அமைச்சரிடமிருந்து ஆளுநருக்கு ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது; அப்படி இருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக திரு. ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் தற்போது எனக்குத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்கமாகப் பின்பற்றப்படும் நடைமுறைகளின்படி (established convention), அவர் என்னிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை.

இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பின் மாண்பைச் சீர்குலைப்பதுடன், நமது கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையையேத் தாக்குகின்றன. மத்திய அரசு 'கூட்டுறவு கூட்டாட்சி' (Cooperative Federalism) தத்துவத்தை மதிக்க வேண்டும். மேலும், ஜனநாயக மரபுகளையும் மாநிலங்களின் கண்ணியத்தையும் சிதைக்கும் வகையிலான ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்" என தெரிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+