இவ்வளவு கோடியா? குஜராத் சட்டசபை தேர்தலில் தான் அதிக பணம் பறிமுதல்.. தேர்தல் ஆணையம் ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சமீபத்தில் நடந்து முடிந்த 11 சட்டசபை தேர்தல்களின்போது மொத்தம் ரூ.3,400 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அதிக பணம் என்பது குஜராத்தில் தான் சிக்கி உள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்தார். டெல்லியில் இன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்தில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்ததார்.

Gujarat is top Election commission seized Rs 3 400 crore cash in 2022-2023 11 state assembly election

அப்போது மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தலுக்கான தேதி என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்ட தேர்தல் என்பது ஏப்ரல் 19 ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு 45 நாட்கள் கழித்து ஜுன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினம் தான் ஒட்டுமொத்த லோக்சபா தேர்தல் ரிசல்ட் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தான் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின்போது தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளும் அமலாக்கத்துறை மூலம் கண்காணிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் தேர்தலில் இலவசம் மற்றும் பணப்பட்டுவாடா தடுப்பதில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி விரிவாக தெரிவித்தார்.

இந்த சமயத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த 11 சட்டசபை தேர்தல்களில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்த தகவலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 2022-23 ம் ஆண்டில் இந்தியாவில் ராஜஸ்தான், நாகலாந்து, தெலுங்கானா, குஜராத், மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, திரிபுரா, மிசோராம், சத்தீஸ்கர், மேகாலாயா ஆகிய 11 மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த 11 மாநிலங்களில் இருந்து தேர்தல் வேளையில் மொத்தம் ரூ.3,400 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்ச பணம் என்பது குஜராத் மாநிலத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் ரூ.802 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த முந்தைய சட்டசபை தேர்தலை ஒப்பிடும்போது 2,847 சதவீதம் அதிகமாகும்.

அதற்கு அடுத்தப்படியாக தெலுங்கானாவில் ரூ.778 கோடி, ராஜஸ்தானில் ரூ.704 கோடி, கர்நாடகாவில் ரூ.384 கோடி,
மத்திய பிரதேசத்தில் ரூ.332 கோடி, மிசோரமில் ரூ.123 கோடி, சத்தீஸ்கரில் ரூ.78 கோடி, மேகலாயாவில் ரூ.74 கோடி, நாகலாந்தில் ரூ.50 கோடி, திரிபுராவில் ரூ.45 கோடி, ஹிமாச்சல பிரதேசத்தில் ரூ57 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+