அரசு ஊழியர்கள் டபுள் ஹேப்பி.. ஒரே மாசம்.. ஜாக்பாட் வரப்போகுது.. மத்திய அரசு சர்ப்ரைஸ்?
டெல்லி: அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஜாக்பாட் அடிக்க போகிறது.. அடுத்த மாதமே மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வரலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
கொரோனா காலகட்டத்தின்போது, ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரையிலான 18 மாத அகவிலைப்படி மற்றும் 3 தவணை அகவிலைப்படியை மத்திய அரசு நிறுத்திவிட்டது. காரணம், பொருளாதார நிலைமை சரியில்லை என்று அரசு கூறியிருந்தது.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி இது குறித்து சொன்னபோது, 2020-ல் கொரோனா தொற்றுநோய் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதால், அகவிலைப்படி நிறுத்திவைக்கப்பட்டதாக தெளிவுபடுத்தியிருந்தார்.
கோரிக்கை: தேசிய அமைச்சர்கள் குழு (ஜேசிஎம்) செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா, பிறகு, அமைச்சரவை செயலாளருடனான சந்திப்பில் இந்த பிரச்சினையை ஒருமுறை எழுப்பியிருந்தார்.. அப்போது, நிலுவை தொகை கிடைக்கும் என தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.. ஆனாலும், பட்ஜெட் கூட்டத்தொடர்களில் இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது.
எனினும், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் DA/DR ஐ மத்திய அரசு தடை செய்தது. அப்போது மத்திய அரசு ஊழியர்களின் 11 சதவீத டிஏ-வை நிறுத்தியதன் மூலம், பல கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டது. மத்திய அரசுக்கு 34,000 கோடி தொகை சேமிக்கப்பட்டதாம்.
நிலுவை தொகை: அதன்பிறகு, 18 மாத நிலுவைத் தொகையை வழங்குவது தொடர்பாக ஊழியர் அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசுக்கு பல்வேறு விருப்பங்களை பரிந்துரைத்தனர். நிலுவைத் தொகையை மொத்தமாக செலுத்துவதும் இதில் அடங்கும்.
இப்படிப்பட்ட சூழலில்தான், மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்கள் சங்கங்களும் இணைந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத கால டிஏ நிலுவைத் தொகையை விடுவிக்குமாறு பாரதிய பிரதிக்ஷா மஸ்தூர் சங்கத்தின் பொதுச்செயலாளர் முகேஷ் சிங் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டிருந்தார்.
எனினும் விரைவில் எம்பி தேர்தல் வரப்போவதால், அகவிலைப்படியை உயர்த்தி, பழைய டிஏ நிலுவைத் தொகையையும் மத்திய அரசு வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தேர்தலுக்கு முன்னதாகவே 18 மாத கால நிலுவைத் தொகை குறித்தான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக லட்சக்கணக்கான ஊழியர்களை வாக்கு வங்கியாக பயன்படுத்த அரசு திட்டமிடலாம் என்றும் தெரிகிறது.
வாக்கு வங்கிகள்: எப்படியும், மத்திய ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் 4 சதவீதம் உயர்த்தப்படும் என்றும், இதற்கான ஒப்புதல் வரும் மார்ச் மாதம் கிடைத்துவிடும், அப்படி மார்ச் மாதத்தில் அறிவிப்பு வெளியான பிறகு, DA உயர்வு ஏப்ரல் 2024ல் ஊழியர்களின் சம்பளத்தில் வந்துசேர்ந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுருக்கமாக சொல்லப்போனால், ஹோலி பண்டிகைக்கு முன்பாகவே, இந்த அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 மாத நிலுவைத் தொகை ஒரே நேரத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெருத்த நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications