ரயிலில் ஸ்பெஷல் சாப்பாடு.. பயணிகளுக்கு சிறப்பு நவராத்திரி உணவு.. ஆன்லைனில் எப்படி பெறுவது? மகிழ்ச்சி
டெல்லி: பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை இந்திய ரயில்வே செய்து வரும் நிலையில், நவராத்திரி பண்டிகையையொட்டி நாடு முழுதும் 150 ரயில் நிலையங்களில் சிறப்பு உணவை அறிமுகப்படுத்துகிறது. இந்த அறிவிப்பானது பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
இந்துகளின் திருவிழாவான நவராத்திரி வடமாநிலங்களில் மிகவும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கமாகும்.. அந்தவகையில், நவராத்திரி விழாவை முன்னிட்டு ரயில் பயணிகளுக்கு சிறப்பு நவராத்திரி விரத உணவை இந்திய ரயில்வே நிர்வாகம் வழங்குகிறது.

அதுமட்டுமல்லாமல், விசேஷமான சில கோயில்களுக்கு அருகில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில்களை நிறுத்தவும் இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது... இந்த நவராத்திரி நாட்களில், ரயில் பயணிகளுக்கு விரத நாளில் உண்ணும் சைவ உணவையும் ஏற்பாடு செய்து தருகிறது. இது தொடர்பாக இந்திய ரயில்வே அமைச்சகம் செய்தி குறிப்பு வெளியிட்டிருக்கிறது.
இணையதளம்: அதில், "நவராத்திரியையொட்டி பண்டிகையை கொண்டாட ரயிலில் பயணிப்பவர்களின் வசதிக்காக நவராத்தரி சிறப்பு உணவை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐஆர்சிடிசி நாடு முழுதும் சென்னை, லக்னோ, பாட்னா, செகந்திராபாத், ஜலாந்தர், திருப்பதி, ஐதராபாத்,பெங்களூரு, மும்பை, கோல்கட்டா டில்லி உள்ளிட்ட 150 பெருநகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்த ஏற்பாடு செய்துள்ளது. இதற்கென இணையதளம், செயலி வாயிலாக ஆர்டர் செய்து பெற்றுள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. வழக்கமாக நவராத்திரியின்போது பயணம் செய்யும் பயணிகளுக்கு இத்தகைய உணவை ரயில்வே நிர்வாகம் ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது. அந்தவகையில், இந்த வருடமும் இந்த சிறப்பு அறிவிப்பு வந்துள்ளது. நவராத்திரி பண்டிகைக்காக, இந்த சிறப்பு விரத உணவு சிறப்பாக தயாரிக்கப்படுவதுடன், தரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாம்.
சிறப்பு சாப்பாடு: கிழக்கு மத்திய ரயில்வே மண்டல அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட தகவலின்படி, பாட்னா சந்திப்பு, மும்பை சென்ட்ரல், டெல்லி சந்திப்பு, சூரத், ஜெய்ப்பூர், லக்னோ, லூதியானா, துர்க், சென்னை சென்ட்ரல், செகந்திராபாத், உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட நிலையங்களில் நவராத்திரி சிறப்பு சாப்பாடு கிடைக்கும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
அதேபோல, அமராவதி, ஹைதராபாத், திருப்பதி, ஜலந்தர் சிட்டி, உதய்பூர் நகரம், பெங்களூரு கான்ட், புது தில்லி, தானே, புனே, மங்களூர் மத்திய நிலையம் ஆகியவற்றிலும் நவராத்திரி ஸ்பெஷல் சாப்பாடு கிடைக்கும். ஆன்லைனிலும் மொபைல் ஆப் மூலமாகவும் பயணிகள் இந்த வசதியைப் பெறலாம்.
இ-கேட்டரிங்: இந்திய ரயில்வேயின் நவராத்திரி ஸ்பெஷல் சாப்பாட்டை ஆர்டர் செய்ய வேண்டுமானால், பயணிகள் ஐஆர்சிடிசி (IRCTC) செயலிக்குச் சென்று, அவர்களின் PNR எண்ணை டைப் செய்து விரத உணவுக்கு ஆர்டர் கொடுக்கலாம். ரயில்வேயின் இ-கேட்டரிங் தளத்திற்குச் சென்றும் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications