டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே

Google Oneindia Tamil News

Recommended Video

    Kulbhushan Jadhav | குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு!சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

    டெல்லி: இந்தியரான குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்தி வைத்து தீர்ப்பளித்துள்ளது.

    இது, இந்தியாவுக்கு கிடைத்த ஒரு பெரிய ராஜதந்திர வெற்றியாகும், மேலும், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தியாவின் உயர்மட்ட வழக்கறிஞர்களில் ஒருவரான ஹரிஷ் சால்வே, இந்த வழக்கிற்கு வாதாடியதற்காக 1 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்றுள்ளார்.

    Harish Salve Charged just Re 1 for the Kulbhushan Jadhav case

    அவர் வாதிடும் வழக்குகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக அறியப்படுபவர், ஐ.சி.ஜே.யில் வாதாட கட்டணமாக எங்களிடம் இருந்து ரூ.1 வசூலித்துள்ளார் என்று முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

    வெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி வெற்றி நமதே... குல்பூஷண் ஜாதவின் நண்பர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி

    உண்மையான தேசிய மனப்பான்மையிலும், ஒட்டுமொத்த தேசத்தின் உணர்வுகளையும் மனதில் வைத்துதான் சால்வே அந்த கட்டணத்தை இந்திய அரசிடம் இருந்து பெற முடிவு செய்தார். அவர் ஒரு உண்மையான தேசபக்தர் என்று தகவல்கள் கூறுகின்றன.

    அணு ஆயுதக் குறைப்பு விதியை மீறியதாக, இந்தியா மீது வழக்குத் தொடர மார்ஷல் தீவுகள் மேற்கொண்ட முயற்சியை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் ஹரிஷ் சால்வே வெற்றிகரமாக வாதிட்டதையும் நினைவு கூறும் நேரம் இது.

    English summary
    The external affairs minister was responding to a twitter user who claimed that any good Indian lawyer would have done the same and with much less expenses than Harish Salve.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X