அமித் ஷாவின் "மாஸ்டர்மைன்ட்"! தமிழ்நாடு திரும்பினார் மாஜி ஐபிஎஸ் விஜயகுமார்! போகஸ் மாறுதே! என்னாச்சு
டெல்லி: டெல்லியில் உள்துறை பணிகளில் பிசியாக இருந்த முன்னாள் காவல் அதிகாரி விஜயகுமார் ஐபிஎஸ் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு தமிழ்நாடு திரும்பி உள்ளார். திடீரென இவர் தமிழ்நாட்டிற்கு திரும்பியது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
அதிரடி நடவடிக்கை, கண்டிப்பான செயல்பாடு ஆகியவை விஜயகுமார் ஐபிஎஸ் அடையாளமாக இருந்தது. முக்கியமாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மெய்க்காவல் படையிலும் இவர் தலைமை பாதுகாவலராக இருந்தார். அரசியல் தாண்டி பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமாக இருந்தார். தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் விஜயகுமார் ஐபிஎஸ். வீரப்பனை சுட்டுக்கொன்ற சிறப்பு படையின் தலைவராக இருந்தார்.

அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருக்கமான அதிகாரியாக பார்க்கப்பட்டவர் விஜயகுமார் ஐபிஎஸ். இதன் மூலம் ஜெயலலிதாவின் அவரின் மெய்க்காவல் படை தலைவராகவும் இருந்தார்.பல்வேறு பணிகளில் இருந்த இவர் ஓய்விற்கு பின் மத்திய பாஜக அரசால் கவனிக்கப்பட்டார்.
வீரப்பன் ஆபரேஷனை 2004ல் இவர் வெற்றிகரமாக முடித்தார். இந்த ஆபரேஷன் வெற்றி காரணமாக இந்தியா முழுக்க கவனம் பெற்றார் விஜயகுமார் ஐபிஎஸ்.
முக்கியமாக மத்திய பாஜக அரசின் உள்துறை அமைச்சகத்தில் இவருக்கு தொடர்ந்து பணி வழங்கப்பட்டு வந்தது. ஓய்விற்கு பின்பும் 6 வருடம் கூடுதலாக அவருக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் 2019க்கு பின் வரை வரிசையாக பல்வேறு தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. முக்கியமாக தினமும் பல்வேறு என்கவுண்டர்கள் மேற்கொள்ளப்பட்டன.

சிறிய சிறிய தீவிரவாத அமைப்புகள், காஷ்மீரில் இருக்கும் பாகிஸ்தானின் பிராக்சி தீவிரவாத அமைப்புகள் பலவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க இவர் போட்டுக்கொடுத்த ஆலோசனைகள், திட்டங்கள் முக்கிய காரணமாக இருந்தது. இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர் பதவியில் இருந்து பின்னர் உள்துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
ஓய்விற்கு பின் சிறப்பு பதவியாக அவருக்கு இந்த ஆலோசகர் பதவி வழங்கப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு பாதுகாப்பு தொடர்பாக நேரடி ஆலோசனைகளை வழங்கி வந்தார். காஷ்மீர் ஆபரேஷனிலும், உள்துறை விவகாரங்களிலும் அமைச்சர் அமித் ஷா, ஐபியில் பணியாற்றிய ஆர். என் ரவி (தற்போது தமிழ்நாடு ஆளுநர்) ஆகியோரிடமும் இவர் நெருக்கமாக இருந்தார். அதேபோல் அஜித் தோவலுடன் மிக மிக நெருக்கமாக கடைசி நாட்களில் இவர் பணியாற்றினார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இவரை சில முறை சந்தித்து ஆலோசனை செய்த சம்பவங்களும் நடைபெற்றன. இந்த நிலையில்தான் திடீரென இவர் தமிழ்நாடு திரும்பி உள்ளார். பணி நிமித்தமாக இவர் திரும்பியதாக தகவல் வெளியாகவில்லை. மாறாக பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இவர் தமிழ்நாடு திரும்பி உள்ளார். இவரின் தமிழ்நாடு வருகை அரசியல் ரீதியாக மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீர் போன்ற பாதுகாப்பு குறைபாடு உள்ள மாநிலத்தில் இருந்தவர், உள்துறைக்கு நேரடியாக அறிவுரை வழங்கியவர் திடீரென தமிழ்நாட்டிற்கு வருவது சாதாரண விஷயம் கிடையாது. தமிழ்நாடு வந்த இவருக்கு முக்கிய போஸ்டிங் ஏதாவது போடப்படுமா? அல்லது தென்னிந்தியாவில் ஏதாவது மாநிலத்தில் இவருக்கு முக்கிய பொறுப்பு ஏதாவது கொடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் கால் பதிக்க பாஜக தீவிரமாக முயன்று வரும் நிலையில்தான் இவரின் வருகை பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
1975ம் ஆண்டு பேட்ஜில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானவர் விஜயகுமார் ஐபிஎஸ். முதலில் எஸ்.பியாக இவர் பட்டுக்கோட்டை மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டார். அதன்பின் பல மாவட்டங்களில் பணியாற்றிய இவர் இடையில் மத்திய அரசின் பிரிவிலும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேலுமணி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா! எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சி! -
சொத்து பதிவு பிரச்சனைக்கு தீர்வு.. STAR 3.0 மூலம் தமிழக பதிவுத்துறை கொண்டுவந்த புதிய வசதி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
ரூ.1 லட்சம் மாமூல்.. செங்கல்சூளை உரிமையாளரை மிரட்டி தவெக நிர்வாகிக்கு நேர்ந்த கதி.. அதிரடி நீக்கம் -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா? -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications