ஒரு தனி நபரின் ஈகோ.. என்னவெல்லாம் பண்ணுது பாருங்க! இந்தியா-பாகிஸ்தான் போருக்கு காரணமான அசிம் முனீர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் - இந்தியா இடையே தற்போது நடக்கும் பயங்கர மோதலுக்கு ஒரு தனி மனிதரின் ஈகோ காரணம். அந்த தனி மனிதர் யார்? என்ன நடந்தது?
பொதுவாக இந்தியாவில் அவ்வப்போது பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்துவது வழக்கம். இதற்கு இந்தியா பல கட்டமாக பதிலடியை கொடுத்துள்ளது. உதாரணமாக புல்வாமா தாக்குதலுக்கு பாலக்கோடு பதிலடி, அதேபோல் உரி அட்டாக் தொடங்கி பல முறை இந்தியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் அட்டாக் தாக்குதல்களை நடத்தி உள்ளது.
ஆனால் இப்படி நடத்தப்பட்ட பதிலடி தாக்குதல் அனைத்திலும் பாகிஸ்தான் இந்தியாவை விமர்சனம் செய்யும். ஏன் இப்படிஸ் செய்கிறீர்கள் என்று கண்டனம் செய்யும். உதாரணமாக பாலக்கோடு பதிலடி தாக்குதலின் போது இந்தியாவை பாகிஸ்தான் ராணுவம் கண்டித்தது. பாகிஸ்தான் ராணுவ விமானப்படை கூட இந்திய போர் விமானங்களுடன் வானத்தில் மோதலில் ஈடுபட்டது.
ஆனால் அப்போதெல்லாம் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை நேரடியாக தாக்கவில்லை. இந்தியா உள்ளே வந்து தாக்க முயற்சிக்கவில்லை. பாகிஸ்தான் ராணுவம் அதிகபட்சம் pokல் தாக்குதல் நடத்தும். இப்போது நடப்பது போல உள்ளே புகுந்து தாக்க முயற்சிக்காது.

இதற்கு காரணம் உள்ளது. அப்போது ராணுவ தளபதியாக கமர் ஜாவேத் பஜ்வா இருந்தார். அவருக்கு தெரியும்.. இந்தியா - பாகிஸ்தான் போர் வந்தால்.. இந்தியாதான் வெல்லும் . பாகிஸ்தான் 10 நாட்கள் கூட தாங்காது. பாகிஸ்தானின் ராணுவத்திடம் பலம் இல்லை. இருக்கிற pokவையும் இழக்க நேரிடும் என்பது அவருக்கு தெரியும். அதன் காரணமாகவே அவர் போருக்கு செல்லவில்லை. ஆனால் இப்போது மட்டும் எப்படி பாகிஸ்தான் உள்ளே வந்து அடிக்க பார்க்கிறது என்ற கேள்வி உங்களுக்கு வருகிறதா?
தனி மனிதரின் ஈகோ
இப்போது உள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் முந்தைய தளபதிகள் போல இல்லை. ஈகோ பிடித்த நபர். பலமே இல்லாமல் சண்டைக்கு வாடா வாடா என்று கூறுவார்களா.. அடித்தால் காலியாகிவிடுவார்கள் என்ற உடலை வைத்துக்கொண்டு.. குடித்தவுடன் சண்டைக்கு வருவார்களே அப்படித்தான் அசிம் முனீர். இந்தியாவுடன் மோதினாலும் பாகிஸ்தான் தோற்கும் என்று தெரிந்தும் கூட அசிம் முனீர் இந்தியாவுடன் போருக்கு செல்ல முனைப்புடன் இருக்கிறார்.
மோதல் நடந்தால் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் அதிகாரம் குறையும். ராணுவ தளபதி அசிம் முனீர் பவர் அதிகரிக்கும். அவர் நாட்டையே கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவார். இதை நாம் சொல்லவில்லை. பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானே சொல்கிறார். அசிம் முனீர் தனது தனிப்பட்ட ஈகோ.. தனிப்பட்ட பவரை அதிகரிக்க வேண்டும் என்று இப்படி எல்லாம் அட்டாக் செய்கிறார்.
தேவையின்றி நாட்டை போரை நோக்கி கொண்டு செல்கிறார் என்று அசிம் முனீர் மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். உலகம் முழுக்க பல நாடுகள் தனிப்பட்ட மனிதரின் ஈகோவால் போருக்கு சென்றுள்ளது. ஹிட்லர் தொடங்கி பலர் இதற்கு உதாரணம். அதே பாதையை அசிம் முனீர் கடைபிடிக்கிறார்.
இந்தியாவை தாக்கினால் 10 நாள் கூட தாங்க மாட்டோம் என்று தெரிந்தும் தனது சொந்த பவரை அதிகரிக்க அசிம் முனீர் இப்படி எல்லாம் செய்கிறார். இதனால் வரும் நாட்களில் அவருக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்திலேயே கலகம் வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.












Click it and Unblock the Notifications