Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாகிஸ்தானிடம் எத்தனை விமானங்களை இழந்தோம்? ராகுல் காந்தி மீண்டும் கேள்வி.. ஜெய்சங்கர் மீது ‛அட்டாக்'

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு தெரிவித்தது தவறு அல்ல. அது குற்றம். இதனால் எத்தனை விமானங்களை நாம் இழந்தோம்''என்று கூற வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை விமர்சனம் செய்துள்ளார் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் நுழைந்து கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மொத்தம் 26 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றது.

how-many-indian-aircraft-did-we-lose-because-pakistan-knew-rahul-gandhi-raises-question-again-to-j

இதையடுத்து நம் நாடு கடந்த 7 ம் தேதி ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடங்கியது. பாகிஸ்தான் மீது ஏவுகணைகளை வீசி 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி பதிலுக்கு தாக்க நினைத்த பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்த நம் படைகள் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தி பாகிஸ்தானின் 3 விமானப்படை தளங்களை அழித்தது.

அதன்பிறகு மோதலை முடிவுக்கு கொண்டு வரும்படி பாகிஸ்தான் கெஞ்சியது. இதையடுத்து நம் நாடு பாகிஸ்தான் மீதான தாக்குதலை நிறுத்தியது. இதையடுத்து இருநாடுகள் இடையே அமைதி நிலவி வருகிறது.

இந்நிலையில் தான் கடந்த வியாழக்கிழமை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பேட்டியில், ‛‛ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தொடக்கத்தில் பயங்கரவாதிகளின் முகாம்களாக உள்ள உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக பாகிஸ்தானுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டது. நாங்கள் ராணுவம் மீது தாக்குதல் நடத்தவில்லை. இதனால் பாகிஸ்தான் ராணுவம் தலையிடாமல் தள்ளி நிற்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர்கள் அதனை விரும்பவில்லை'' என்று கூறியிருந்தார்.

இதையடுத்து கடந்த 17 ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛
தாக்குதலுக்கு முன்பாகவே அதுபற்றி பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்தது குற்றம். அரசு இதை செய்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனை யார் அங்கீகரித்தார்கள்? இதனால் நம் விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது? '' என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு வெளியுறவுத்துறை விளக்கம் அளித்தது. அதில், ‛‛மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே அந்த மெசேஜ் அனுப்பப்பட்டது. ஆனால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கும்போது இந்த மெசேஜ் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் இன்று ராகுல் காந்தி மீண்டும் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இதுபற்றி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛ மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மவுனம் என்பது மிகவும் மோசமானது. இதனால் நான் மீண்டும் கேட்கிறேன். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு தெரிந்ததால் எத்தனை விமானங்களை நாம் இழந்தோம். இது தவறு அல்ல. இது குற்றம். இந்த நாடு உண்மையை அறிய தகுதியானதாக இருக்கிறது'' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+