குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குகள் எப்படி எண்ணப்படும்? முடிவுக்கு பின் என்ன நடக்கும்? 10 தகவல்கள்
டெல்லி: இன்று நடைபெறும் இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்? அதன் பின்னர் நடக்கப்போகும் நிகழ்வுகள் குறித்த தகவல்களை பார்ப்போம்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்றது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் எம்.எல்.ஏக்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தனர்.

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்த 10 தகவல்கள்:
1. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் தயாராக உள்ள நிலையில் பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றத்தில் வாக்குப் பெட்டிகள் திறக்கப்பட்டு காலை 11 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன.
2. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான முடிவுகள் மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3. வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் வாக்குகள் தனித்தனியாக பிரிக்கப்படும்.
4. ஒவ்வொரு எம்.பிக்களின் வாக்கு மதிப்பு 700 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எம்.எல்.ஏக்களின் வாக்கு மதிப்பு அவர்களின் மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
5. குடியரசுத் தலைவர் தேர்தலை பொறுத்தவரை அதிக வாக்குகளை பெறுபவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட மாட்டார். குறிப்பிட்ட ஒதுக்கீட்டைவிட அதிக வாக்குகளை பெறுபவரே வெற்றிபெறுவார். வேட்பாளர்களுக்கு விழும் வாக்குகளை 2 ஆக வகுத்து அத்துடன் "1" ஐ சேர்ப்பதன் மூலம் ஒதுக்கீடு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த கணக்கீட்டில் அதிக வாக்குகளை பெறுபவரே வெற்றியாளர்.
6: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு 44 கட்சிகளின் ஆதரவும், எதிர்க்கட்சி வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு 34 கட்சிகளின் ஆதரவும் உள்ளன. இந்த 34 கட்சிகளை சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏக்களில் சிலரும் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளனர்.
7. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் திரௌபதி முர்மு வெற்றிபெற்றால் அவரை ஜவஹர்லால் நேரு வசித்த டீன் முர்தி மார்க் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்திப்பார்.
8. திரௌபதி முர்மு வெற்றிபெற்றவுடன் அவரை பாஜக தலைமையகத்திலிருந்து டெல்லி ராஜ்பாத் வரை பேரணியாக அழைத்து செல்ல அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இதில் பல மூத்த தலைவர்கள் பங்கேற்பார்கள்.
9. திரௌபதி முர்முவின் வெற்றியை கொண்டாடுவதற்காக அனைத்து மாநில பாஜக நிர்வாகங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. முர்முவின் சொந்த ஊரான ஒடிசாவின் ராய்ரங்பூரில் 20,000 இனிப்புகள் தயாரிக்கப்பட்டு, பழங்குடியினர் நடனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
10. குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர் வரும் 25 ஆம் தேதி இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்பார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications