"வாத்தியாரே முதல் மர்டர்!" இந்தியாவில் கெத்தாக வேட்டையை தொடங்கிய ஆப்ரிக்க சிறுத்தைகள்! ஏன் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மிஷன் சீட்டா திட்டத்தின் கீழ் அழிந்துபோன சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் நிலையில், இதில் ஒரு சூப்பர் செய்தி நமக்குக் கிடைத்துள்ளது.

பல்வேறு காரணங்களால் விலங்குகள் வாழும் பகுதிகள் தொடர்ச்சியாகச் சுருங்கி வருகிறது. எல்லா காடுகளையும் குடியிருப்பு பகுதிகளாக மாற்றி, அதை மனிதர்கள் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்.

இதன் காரணமாக விலங்குகள் வாழும் இடங்கள் என்பது தொடர்ந்து சுருங்கி வருகிறது. மேலும், மனித மிருக மோதல்களும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

 விலங்குகள் அழிப்பு

விலங்குகள் அழிப்பு

அத்துடன் விலங்குகளை மனிதர்கள் எந்தவொரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கொன்று குவித்து வருகின்றனர். இதனால் ஒரு காலத்தில் பூமியில் பெருகி இருந்த விலங்கு இனங்கள் கூட இப்போது அழியும் தறுவாயில் உள்ளன. அழியும் விலங்குகளைக் காக்க சில நாடுகள் நடவடிக்கை எடுத்தாலும் கூட பல நாடுகள் இந்த விவகாரத்தில் பெரிய அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.

 சிறுத்தைகள்

சிறுத்தைகள்

மற்ற வல்லரசு நாடுகளை ஒப்பிட்டாளும் கூட இந்தியா வனவிலங்குகளைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தே வருகிறது. அப்படித்தான் இந்தியாவில் அழிந்துபோன இனமான சிறுத்தைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியா நாட்டில் இருந்து சிறுத்தைகள் இந்தியா கொண்டு வரப்பட்டன. ஐந்து பெண் சிறுத்தைகள், மூன்று ஆண் சிறுத்தைகள் என மொத்தம் 8 சிறுத்தைகள் இந்தியா கொண்டு வரப்பட்டது.

 பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

இந்த சிறுத்தைகளைப் பிரதமர் நரேந்திர மோடி மத்தியப் பிரதேசம் குனோ-பால்பூர் தேசிய பூங்காவில் விடுவிக்கப்பட்டது. பொதுவாக இப்படி அழைத்து வரும் சிறுத்தைகளை நேரடியாகக் காடுகளில் விட மாட்டார்கள். சர்வதேச விதிகளின்படி வேறு நாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும் விலங்குகளுக்கு எந்தவொரு தொற்று நோய்ப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்ய அவை முதலில் தனிமைப்படுத்தப்படும்.

 தனிமையில் சிறுத்தைகள்

தனிமையில் சிறுத்தைகள்

அதாவது சிறு காட்டுப் பகுதிகளில் அவை விடப்படும். இங்குள்ள காடுகளின் தன்மைக்கும் சுற்றியுள்ள சூழலுக்கும் ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.. குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னரே அவை காடுகளில் விடப்படும். அப்படித்தான் கடந்த செப் மாதம் இந்தியா அழைத்து வரப்பட்ட இந்த சிறுத்தைகள் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தன.

 முதல் வேட்டை

முதல் வேட்டை

தனிமைக்குப் பின், கடந்த நவ. 5ஆம் தேதி இதில் இரு சிறுத்தைகள் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டன. இதனிடையே வனப்பகுதிகள் நுழைந்து 24 மணி நேரத்திற்குள் அது தனது முதல் இரையைப் பிடித்து உள்ளது. இது சிறுத்தைகள் புதிய சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வதைக் காட்டுவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். ஃப்ரெடி மற்றும் எல்டன் என்ற அந்த இரு சிறுத்தைகள் இணைந்து புள்ளி மான் ஒன்றை வேட்டையாடி உள்ளது.

 புள்ளி மான்

புள்ளி மான்

ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கட்கிழமை அதிகாலையில் அவை வெற்றிகரமாகப் புள்ளி மானை வேட்டையாடி உள்ளது. நமீபியா நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட பின்னர், இந்தியத் துணைக் கண்டத்தில் சிறுத்தைகள் மேற்கொள்ளும் முதல் வேட்டை இதுவாகும். மற்ற ஆறு சிறுத்தைகள் இன்னும் தனிமையில் தான் உள்ளன. அவற்றுக்கு எருமை மாட்டு இறைச்சி உணவாக வழங்கி பராமரிக்கப்பட்டு வருகிறது.

 மிஷன் சீட்டா

மிஷன் சீட்டா

மற்ற சிறுத்தைகளும் படிப்படியாக வனப்பகுதிகளில் விடப்படும் என்றே கூறப்படுகிறது. இந்தியாவில் இதற்கு முன்னதாக கடந்த 1949இல் சத் மற்ற சிறுத்தைகளும் படிப்படியாக வனப்பகுதிகளில் விடப்படும் என்றே கூறப்படுகிறது. இந்தியாவில் இதற்கு முன்னதாக கடந்த 1949இல் சத்தீஸ்கர் கோரியா பூங்காவில் நாட்டின் கடைசி சிறுத்தை உயிரிழந்தது. அதன் பின்னர் நாட்டில் சிறுத்தை இனம் முற்றிலுமாக அழிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 74 ஆண்டுகளுக்குப் பின், இப்போது மிஷின் சீட்டா திட்டத்தின் கீழ் சிறுத்தை இனத்தை மீட்டெடுக்கும் முயற்சியை இந்தியா முன்னெடுத்து உள்ளது.தீஸ்கர் கோரியா பூங்காவில் நாட்டின் கடைசி சிறுத்தை உயிரிழந்தது. அதன் பின்னர் நாட்டில் சிறுத்தை இனம் நாட்டில் முற்றிலுமாக அழிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 74 ஆண்டுகளுக்குப் பின், இப்போது மிஷின் சீட்டா திட்டத்தின் கீழ் சிறுத்தை இனத்தை மீட்டெடுக்கும் முயற்சியை இந்தியா முன்னெடுத்து உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+