Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உபி, பஞ்சாப் தேர்தல்.. பெட்டிங் உலகில் கோடிகளில் நடக்கும் முதலீடு.. பெரும் சூதாட்டம்.. வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அடுத்த வருடம் நடக்க உள்ள 5 மாநில தேர்தலை மையமாக வைத்து பெட்டிங் மாபியா உலகில் மாபெரும் சூதாட்டம் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த வருடம் தேர்தல் நடக்க உள்ளது. இதில் 4 மாநிலங்களில் பாஜக ஏற்கனவே ஆட்சியில் உள்ளது. இந்த 5 மாநில தேர்தல் காரணமாக இந்தியாவில் 2022ம் வருடம் மிக முக்கியமான அரசியல் வருடமாக பார்க்கப்படுகிறது.

முக்கியமாக உத்தர பிரதேசம், பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்கள் அதிக அளவில் கவனம் பெற்றுள்ளது.

கணிப்பு

கணிப்பு

இதுவரை வெளியான பல்வேறு செய்தி நிறுவனங்களின் கணிப்புப்படி உத்தர பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் அங்கு ஆம் ஆத்மி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநிலங்களில் குறைந்த இடங்கள் வித்தியாசத்தில் பாஜக வெற்றிபெறும் என்று கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.

பெட்டிங்

பெட்டிங்

இந்த நிலையில்தான் 5 மாநில தேர்தலை மையமாக வைத்து வடஇந்தியாவில் பிரபலமாக செயல்படும் Satta Bazar எனப்படும் சூதாட்ட மார்க்கெட்டில் நிறைய சூதாட்டங்கள் நடக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி எந்த மாநிலத்தில் எந்த கட்சி எவ்வளவு இடங்களை வெல்லும் என்று கணிப்புகளை தெரிவித்து, அதில் பெட்டிங் செய்து சூதாட்டம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றதாம்.

சூதாட்டம்

சூதாட்டம்

முக்கியமாக பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்கள் இதில் அதிகம் குறி வைக்கப்பட்டுள்ளதாம். இதில் அரசியல் கட்சிகளுக்கு நெருக்கமான நபர்கள் அதிக அளவில் பணங்களை போட்டு வருகிறார்கள். இந்த மாநிலத்தில் இந்த கட்சி அதிக தொகை கொடுக்கும் என்று பல கோடி பணத்தை சூதாட்ட மார்க்கெட்டில் இறக்கி வருகிறார்களாம்.

 எப்படி கட்டுகிறார்கள்

எப்படி கட்டுகிறார்கள்

இந்த பெட்டிங்கில் உத்தர பிரதேசத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டால். அங்கு பாஜக அதிகம் வெல்ல வாய்ப்பு இருப்பதால் அவர்கள் மீது பந்தயம் கட்டி வெல்பவர்களுக்கு குறைந்த லாபமே கிடைக்கும். அதுவே சமாஜ்வாதி மீது பந்தயம் கட்டி ஒருவேளை சமாஜ்வாதி அதிக இடங்களை வென்றால் அதில் பந்தயம் கட்டியவர்களுக்கு லாபம் வரும். அதன்படி 1 ரூபாய்க்கு கூடுதலாக 20 பைசா முதல் 3 ரூபாய் வரை லாபம் தரும் வகையில் இந்த பந்தயம் கட்டப்பட்டு வருகிறது.

முழு விபரம்

முழு விபரம்

5 மாநில தேர்தல் தொடர்பாக நடக்கும் முறைகேடான ரகசிய சூதாட்ட பந்தய விவரங்கள் . உத்தர பிரதேசத்தில் - 403 இடங்கள் உள்ளது. பாஜக இதில் 200 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் காட்டும் நபர்கள் ஒருவேளை பந்தயம் கட்டியது போலவே வென்றால் அவர்கள் கட்டிய ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 0.20 பைசா லாபம் வழங்கப்படும். பாஜக 210 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் 0.35 பைசா லாபம் வழங்கப்படும். 215 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 0.57 பைசா லாபம் வழங்கப்படும். 222 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 1.15 ரூபாய் லாபம் வழங்கப்படும்.

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேசம்

இதே உத்தர பிரதேசத்தில் சமாஜ் வாதி 110 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 0.35 பைசா லாபம் வழங்கப்படும். 115 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 0.60 பைசா லாபம் வழங்கப்படும். 120 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 1.05 ரூபாய் லாபம் வழங்கப்படும். 125 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 1.40 ரூபாய் லாபம் வழங்கப்படும்.

சமாஜ்வாதி

சமாஜ்வாதி

அங்கு பகுஜன் சமாஜ் 5 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 0.4 பைசா லாபம் வழங்கப்படும். 10 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 0.67 பைசா லாபம் வழங்கப்படும். 15 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 1.10 ரூபாய் லாபம் வழங்கப்படும்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் 5 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 0.55 பைசா லாபம் வழங்கப்படும். 6 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 0.70 பைசா லாபம் வழங்கப்படும். 8 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 1.00 ரூபாய் லாபம் வழங்கப்படும்.

பஞ்சாப்

பஞ்சாப்

இதேபோல் பஞ்சாப் தேர்தலில் 117 இடங்களில் ஆம் ஆத்மி 25 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 0.35 பைசா லாபம் வழங்கப்படும். 30 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 0.4 பைசா லாபம் வழங்கப்படும். 35 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 0.87 பைசா லாபம் வழங்கப்படும். 40 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 1.15 ரூபாய் லாபம் வழங்கப்படும்.

சூதாட்டம்

சூதாட்டம்

பஞ்சாப்பில் காங்கிரஸ் 25 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 0.45 பைசா லாபம் வழங்கப்படும். 30 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 0.57 பைசா லாபம் வழங்கப்படும். 35 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 0.90 பைசா லாபம் வழங்கப்படும். 40 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 1.35 ரூபாய் லாபம் வழங்கப்படும்.

அகாலிதளம் சூதாட்டம்

அகாலிதளம் சூதாட்டம்

பஞ்சாப்பில் அகாலிதளம் 5 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 0.35 பைசா லாபம் வழங்கப்படும். 10 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 0.57 பைசா லாபம் வழங்கப்படும். 15 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 0.87 பைசா லாபம் வழங்கப்படும். 20 இடங்கள் வெல்லும் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் கூடுதலாக 1.20 ரூபாய் லாபம் வழங்கப்படும்.

எவ்வளவு பந்தயம்

எவ்வளவு பந்தயம்

இதேபோல் மற்ற மாநிலங்களிலும் அதிக அளவில் தொகைகளை கட்டி பெட்டிங் செய்து கொண்டு இருக்கும் விபரங்கள் வெளியாகி உள்ளன. இதில் லாப தொகை பைசா கணக்கில் இருந்தாலும் லட்ச கணக்கில் முதலீடு செய்யும் போது லாபம் அதிகம் அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. தேர்தலை வைத்து பெட்டிங் மாபியா உலகில் நடக்கும் இந்த மாபெரும் சூதாட்டம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+