அடேங்கப்பா.. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனித தலைகள்! யோகியை அதிர வைத்த அகிலேஷ் யாதவ் பொதுக் கூட்டம்
டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பண்டாவில் சமாஜ்வாதி கட்சியின் விஜய் ரத யாத்திரை நேற்று நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டார்.
Recommended Video
அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற உள்ள உத்தர பிரதேச சட்டசபை தேர்தலையொட்டி, மாநிலம் முழுக்க அகிலேஷ் யாதவ் ரத யாத்திரை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, நேற்று பண்டா பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அகிலேஷ் யாதவ் உரையாற்றினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மனித தலைகள்
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மனித தலைகளாக காட்சியளித்தன. இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக பெரிய அலை உருவாகி இருப்பது, இந்த கூட்டத்தை பார்த்தாலே தெரிகிறது என்று, அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

மக்கள் ஆதரவு
பீகாரில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பங்கேற்ற பொதுக்கூட்டங்களில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. தேர்தல் வாக்களிப்பிலும் இது எதிரொலித்தது. ராஷ்டிரிய ஜனதா தளம் அதிக இடங்களை கைப்பற்றினாலும் கூட கூட்டணியில் இருந்த காங்கிரஸ் நிறைய இடங்களில் தோற்றதால் அந்த கட்சி கூட்டணி ஆட்சிக்கு வர முடியவில்லை. மீண்டும் நிதிஷ்குமார் பாஜக கூட்டணி அரசு ஆட்சி அமைத்துள்ளது. ஆனால் சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி கிடையாது என்பது அகிலேஷ் யாதவுக்கு உ.பி.யில் வெற்றி வாய்ப்பை மேலும் அதிகரித்திருப்பதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

யோகி ஆதித்யநாத்திற்கு குடும்பம் இல்லை என்று விமர்சனம்
இதனிடையே, பண்டா கூட்டத்தில், அகிலேஷ் யாதவ் பேசுகையில், எங்களுக்கு குடும்பம் உள்ளது. அதனால், குடும்பத்தில் உள்ள தொழிலாளர்களோ, விவசாயிகளோ உயிரிழந்தால் அதன் வலி எங்களுக்கு புரியும். குடும்பமே இல்லாதவருக்கு அவர்களின் வலி எப்படி புரியும்? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாக உத்தரவாதம் அளித்த யோகி ஆதித்யநாத், நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் கனவுகளைத்தான் கொலை செய்துள்ளார். பூசாரியான யோகி ஆதித்யநாத்துக்கு லேப்டாப், செல்போன் ஆகியவற்றை உபயோகிக்கத் தெரியுமா?

யோக்கியமான அரசு
கொரோனா தொற்றின் உச்சக்கட்ட காலத்தில் உத்தர பிரதேச மக்களை அநாதைகளாக விட்ட தகுதியில்லாத அரசு இது. போலி விளம்பரங்கள் மற்றும் பொய் விளம்பரங்களால் மட்டுமே யோகி அரசு வாழ்ந்து வருகிறது. உங்களுக்கு யோகி அரசு வேண்டுமா, யோக்கியமான அரசு வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல் இது.

தாய்மார்களே
எனது தலைமையிலான அரசு அமைந்தால், தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய திட்டங்கள் மற்றும் செயல்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications