Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனசு கனக்கிறது.. பேச வார்த்தைகளே இல்லை.. நாடாளுமன்றத்தில் உடைந்து பேசிய ராஜ்நாத் சிங்!

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பற்றி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை பற்றி பேச வார்த்தைகளே இல்லை, மனசு கலங்குகிறது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பற்றி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை பற்றி பேச வார்த்தைகளே இல்லை, மனசு கலங்குகிறது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த 26 வயது நிரம்பிய கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடந்த புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார்.இந்த கொலையில் தொடர்புடைய நான்கு பேரையும் போலீசார் அதன்பின் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் தெலுங்கானா கொலை விவகாரம் இன்று லோக்சபாவிலும், ராஜ்யசபாவில் எழுப்பப்பட்டது.

என்ன பேசினார்

என்ன பேசினார்

இதில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அரசு உங்களின் கருத்துக்களை வரவேற்கிறது. பெண்களின் பாதுகாப்பிற்காக நீங்கள் என்ன சொன்னாலும் செய்ய தயாராக இருக்கிறோம். இது போன்ற மோசமான கொடுமைகளை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.

தெலுங்கானா கொடுமை

தெலுங்கானா கொடுமை

தெலுங்கானா கொடுமைக்கு எதிராக இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். அங்கு ஒரு பெண் வன்புணர்வு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது இந்த நாட்டையே அவமானப்படுத்தி உள்ளது. அவர்களுக்கு மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.

வார்த்தை இல்லை

வார்த்தை இல்லை

எனக்கு அதை விவரிக்கவே வார்த்தைகளே இல்லை. அதை கேட்கும் போதே மனசு கலங்குகிறது. இதை பற்றி அவையில் எல்லோரும் விவாதிக்க வேண்டும். இது தொடர்பாக அவசர சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும். நாங்கள் எந்த விதமான கருத்தையும் விவாதிக்க தயாராக இருக்கிறோம்.

அனைத்து விஷயம்

அனைத்து விஷயம்

எங்களால் முடிந்த அனைத்து விஷயங்களை நாங்கள் செய்வோம். இந்தியாவில் இனி இப்படி ஒரு கொடுமை நடக்காத வண்ணம் நாங்கள் செயல்படுவோம். இந்திய மக்களையும் இந்த கொடுமை பாதித்து இருக்கிறது, என்று ராஜ்நாத் சிங் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+