Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.120 கோடி பிரம்மாண்டம்.. டெல்லியில் உலகின் மிக பெரிய பணக்காரரின் மாளிகையில் தங்கும் அதிபர் புதின்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்று மாலை இந்தியாவுக்கு வரும் ரஷ்ய அதிபர் புதின், உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருந்த ஒருவர் கட்டிய மாளிகையில் தான் இன்றைய தினம் தங்க உள்ளார். அப்படி புதின் தங்கும் இடம் எது.. அந்த வீட்டிற்கு மட்டும் அப்படி என்ன சிறப்புகள் இருக்கிறது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.!

ரஷ்ய அதிபர் புதின் இந்தியா- ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இன்று டெல்லிக்கு வருகிறார். அவர் தனது பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. புதின் பயணத்தின்போது டெல்லியில் உள்ள ஹைதராபாத்தின் இல்லத்தில் தான் தங்குகிறார். இந்த இல்லத்தின் சிறப்புகள் குறித்துப் படித்தால் நிச்சயம் வியந்து போவீர்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

Hyderabad House Inside Nizam s Rs 170 Crore Delhi Palace Hosting Putin Indo-Saracenic Marvel

உலகின் மாபெரும் பணக்காரர்

ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் மிர் உஸ்மான் அலி கான் தான் அவரது காலத்தில் உலகின் மிக பெரிய பணக்காரராக இருந்தார். ஒலிம்பிக் நீச்சல் குளத்தை நிரப்பும் அளவுக்கு அவரிடம் முத்துகள் இருந்தது. முத்துகள் அந்த காலத்தில் தங்கத்தை போலவே பெரும் மதிப்பு கொண்டதாகும். அதேபோல ஹைதராபாத் முழுவதும் அவருக்கு அரண்மனைகளும் பரந்து விரிந்து இருந்தது.

முதலில் கொல்கத்தா தான் பிரிட்டிஷ் இந்தியாவுந் தலைநகராக இருந்தது. 1911ல் தான் தலைநகரைப் பிரிட்டிஷார் டெல்லிக்கு மாற்றினர். அப்போது மிர் உஸ்மான் அலி கான் டெல்லியில் தனக்கென ஒரு பிரம்மாண்ட இல்லத்தை அமைத்துக் கொள்ள விரும்பினார். அவர் மட்டுமில்லை பிரிட்டிஷார் ஆட்சியை ஏற்று அதற்குக் கீழ் இருந்த பல மன்னர்கள் டெல்லியில் தங்கள் வசிப்பிடங்கள் கட்ட விருப்பம் தெரிவித்தனர். இதற்குப் பிரிட்டிஷ் வைஸ்ராயும் ஒப்புக் கொண்டார்.

நிறைவேறாத ஆசை

இருப்பினும், மற்ற மன்னர்களைப் போல ஹைதராபாத் நிஜாம் தலைநகரில் ஒரு சாதாரண வசிப்பிடத்தைக் கட்ட விரும்பவில்லை. அவர் பிரம்மாண்ட மாளிகை கட்ட விரும்பினார். இதற்காக வைஸ்ராய் மாளிகைக்கு (தற்போதையே ராஷ்டிரபதி பவன்) அருகிலுள்ள 'பிரின்சஸ் பார்க்' ஒரு இடத்தைக் கேட்டார். இருப்பினும், பிரிட்டிஷ் அரசு இதை ஏற்கவில்லை. இதையடுத்து வைஸ்ராய் மாளிகையிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் சிலை அருகில் நிலம் ஒதுக்கப்பட்டது.

அங்குப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் எட்வின் லூட்டியன்ஸ் ஹைதராபாத் இல்லத்தை வடிவமைத்தார். வைஸ்ராய் மாளிகையைப் போலவே ஒரு பிரமாண்டமான மாளிகையைக் கட்ட ஹைதராபாத் நிஜாம் விரும்பினார். இருப்பினும், பிரிட்டிஷ் அரசு அதற்கு ஒப்புதல் தரவில்லை. இதனால் வைஸ்ராய் மாளிகையின் குவிமாடத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற வடிவமைப்புகளை மொத்தமாக மாற்றினர். ஹைதராபாத் மாளிகை தனித்துவமான பட்டாம்பூச்சி வடிவில் கட்டப்பட்டது.

ரூ.120 கோடி மாளிகை

1920களில் இந்த மாளிகை கட்டப்பட்டது. அப்போதே இதற்கு £200,000 செலவானது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹120 முதல் 170 கோடி செலவிடப்பட்டதாக மதிப்பிடப்படுகிறது. அப்போது உலகின் பெரும் பணக்காரராக இருந்த உஸ்மான் அலி கானின் வசிக்கும் வகையில் பிரம்மாண்டமாக இந்த மாளிகை கட்டப்பட்டது. 8.2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாளிகையில் 36 பெரிய அறைகள், கம்பீரமான படிக்கட்டுகள், நெருப்பு மூட்டும் இடங்கள், நீரூற்றுகள் என திரும்பிய பக்கமெல்லாம் பிரம்மாண்டம் தான். மேலும், மாளிகையில் 'செனானா' என்ற பெண்கள் பகுதியும் இருந்தது.

அரசின் வசம் வந்தது எப்படி

டெல்லியில் அமைந்துள்ள இந்த ஹைதராபாத் மாளிகை மிக பெரியதாகவும், மிக கம்பீரமானதாகவும் இருந்தது. வைஸ்ராய் மாளிகையை (இப்போது ராஷ்டிரபதி பவன்) மட்டுமே இதை விஞ்சக்கூடிய ஒரே கட்டிடமாக இருந்தது. 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது முதலில் ஹைதராபாத் மாகாணம் இந்தியா உடன் இணையவில்லை. 1948ல் தான் ஆபரேஷன் போலோ திட்டத்தில் இந்தியா இணைக்கப்பட்டது. அதன் பிறகு நிஜாம் ஹைதராபாத் மாளிகையைப் பெரிதாகப் பயன்படுத்தவில்லை. இதையடுத்து அவருடைய வாரிசுகள் ஹைதராபாத் இல்லத்தை அரசுக்கு நன்கொடையாகக் கொடுத்தனர்.

1970களில் அப்போது வளர்ந்து வரும் நாடாக இருந்த இந்தியாவுக்குப் பல சர்வதேச தலைவர்கள் வர ஆரம்பித்தனர். அப்போது 1974ஆம் ஆண்டில், வெளியுறவு அமைச்சகம் அந்த மாளிகையின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. அப்போது முதல் உலகின் முக்கிய தலைவர்கள் வரும்போது ஹைதராபாத் இல்லத்திலேயே தங்க வைக்கப்படுகிறார்கள். புதினும் அந்த மாளிகையில் தான் தங்கவுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+