டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன திட்டமோ?.. எதுவும் நல்லதாக தோன்றவில்லை.. காஷ்மீர் பற்றி உமர் அப்துல்லா அச்சம்!

காஷ்மீரில் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் எதுவும் நல்ல விஷயம் போல தெரியவில்லை என்று காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜம்மு காஷ்மீரில் 144 தடை உத்தரவு... தலைவர்கள் வீட்டுக்காவலில் வைப்பு-வீடியோ

    டெல்லி: காஷ்மீரில் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் எதுவும் நல்ல விஷயம் போல தெரியவில்லை என்று காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    காஷ்மீர் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் தற்போது ராணுவ குவிப்பு காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தற்போது அங்கு 75 ஆயிரம் வீரர்கள் மீண்டும் குவிக்கப்பட்டார்கள். அங்கு அமர்நாத் யாத்திரையை தற்போது மத்திய அரசு தடை செய்துள்ளது. கூடுதலாக ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது.

    என்ன

    என்ன

    அதேபோல் தற்போது காஷ்மீரில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் எல்லோரும் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, முக்கிய கட்சியான பீப்பிள் கான்பிரன்ஸ் கட்சியின் தலைவர் சஜாத் லோன் ஆகியோர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அங்கு இணையம் துண்டிக்கப்பட்டுள்ளது.

    என்ன டிவிட்

    இந்த நிலையில் காஷ்மீரில் நடக்கும் பிரச்சனை குறித்து, தற்போது காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா டிவிட் செய்துள்ளார். அதில், நான் காஷ்மீரில் கவனம் செலுத்திக்கொண்டு இருக்கும் நேரத்தில் லடாக், கார்கில், ஜம்மு மக்களுக்கு ஒரு விஷயம் மட்டும் சொல்ல நினைக்கிறேன். உங்களுக்காக எதை அவர்கள் திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அது நல்ல விஷயம் போல தெரியவில்லை. இப்போது நடக்கும் விஷயங்களை பார்த்து நீங்கள் வருத்தத்தில் இருக்கலாம். ஆனால் சட்டம் ஒழுங்கை மட்டும் உங்கள் கையில் எடுக்க வேண்டாம்.

    வன்முறை ஏன்

    வன்முறையை கையாண்டால் அது நமது மாநிலத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு சாதகமாக சென்றுவிடும். நாம் எதிர்பார்த்த விஷயம் கிடையாது இது. நான் இன்னும் இதில் மனதை தளரவிடவில்லை. அமைதி இங்கு மேம்படட்டும். கடவுள் நம்முடன் இருக்கிறார்.

    என்ன முக்கியம்

    முக்கியமாக நான் பிர் பாஞ்சல் மற்றும் செனெப் மலைகளில் இருக்கும் மக்களை நினைத்து கவலை அடைகிறேன். இங்குதான் பெரும்பாலும் கலவரங்கள் நடக்க வாய்ப்புள்ளது. கலவரத்திற்கு எதிராக அரசாங்கம் விரைவான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன், என்று உமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    I’ve no idea what is in store for our state but it doesn’t look good, says Omar Abdullah on Kashmir.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X