காங்கிரஸ் ஆட்சியில் தான் இனி நாடாளுமன்றம் செல்வேன்.. சஸ்பெண்ட் ஆன திமுக எம்.பி அப்துல்லா பரபர!
டெல்லி: பாஜக அரசில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி ஆகிய நான் காங்கிரஸ் கூட்டணி அரசில் உள்ளே கால் வைப்பேன் என திமுக எம்.பி எம்.எம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நடந்த பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் நேற்று அமளியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.

எம்.பிக்கள் சஸ்பெண்ட்: நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினர்கள் 33 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 45 பேர் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவை அத்துமீறல் சம்பவத்துக்குப் பின்பு இதுவரை 90-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திருநாவுக்கரசர், திமுக எம்.பிக்கள் ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், டி.ஆர். பாலு உள்பட 33 எம்.பிக்கள் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கனிமொழி உள்ளிட்ட மக்களவை உறுப்பினர்கள் 13 பேர் ஏற்கெனவே இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாநிலங்களவையிலும் இதே பிரச்னையை வலியுறுத்திய திமுக எம்.பிக்களான என்.ஆர்.இளங்கோ, கனிமொழி என்.வி.என். சோமு, கிரிராஜன், எம்.எம்.அப்துல்லா உள்ளிட்ட 45 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மாநிலங்களவையில், திமுக எம்.பி அப்துல்லா, அண்மையில் பெரியார் பற்றி பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு அத்துமீறல் விவகாரத்தில் அவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 5 திமுக எம்.பிக்களில் அப்துல்லா மீதான நடவடிக்கை நாடாளுமன்ற உரிமைக்குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த கூட்டத்தொடரிலும் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்த கூட்டத்தொடரிலும் பங்கேற்க முடியாது: இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள திமுக எம்.பி எம்.எம்.அப்துல்லா, "இன்றைக்கு நாடாளுமன்ற மேலவையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 44 எம்.பி களில் நான் உட்பட 5 திமுக எம்.பிகளும் அடக்கம். இதில் மற்ற திமுக எம்.பிக்களை இந்தக் கூட்டத் தொடர் முடியும் வரைதான் சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஆனால் என்னை மட்டும் நாடாளுமன்ற உரிமைக்குழுவிற்கு பரிந்துரைத்து அவர்கள் முடிவு வரும் வரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். அந்த முடிவு வர இன்னும் மூன்று மாத காலம் ஆகலாம்.
இதற்கு இடையில் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கிவிடும்! நான் அதிலும் கலந்து கொள்ள முடியாது. இனி அடுத்த புது அரசு அமைந்து கூடும் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தான் நான் கலந்து கொள்ள முடியும். பாஜக அரசில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி ஆகிய நான் காங்கிரஸ் கூட்டணி அரசில் உள்ளே கால் வைப்பேன். என்னை சஸ்பெண்ட் செய்த நாடாளுமன்ற மேலவைத் தலைவருக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ரேங்கிங்கில் இரண்டாம் இடம் பிடித்திருந்தார் அப்துல்லா. வருகை பதிவேடு, எழுப்பிய கேள்விகளின் எண்ணிக்கை, கலந்துகொண்ட விவாதங்களின் எண்ணிக்கை, தனிநபர் மசோதாக்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும். அதன் அடிப்படையில் ரேங்க் கிடைக்கும். இந்த முறை, அப்துல்லா சஸ்பெண்ட் செய்யப்பட்டு, அடுத்த கூட்டத்தொடரிலும் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications