விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தக் காலத்தில் எங்காவது டூர் என்றால் வீட்டில் இருந்து கிளம்பும் முன்பே வீடியோ, போட்டோ எடுக்க ஆரம்பித்துவிடுவோம். இதுதான் இந்தக் காலத்தில் டிரெண்ட். ஆனால், விமான நிலையத்தில் இதுபோல போட்டோ வீடியோ எடுக்கலாமா அல்லது இதற்கு ஏதேனும் தடை இருக்கிறதா என்பது நீண்ட காலமாகவே புரியாமல் இருக்கும் ஒரு குழப்பமாகவே இருக்கிறது. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் புகைப்படம் எடுப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு செய்திகள் பரவி வருகின்றன. விமான நிலைய வளாகத்திற்குள் புகைப்படம் எடுக்கவும், வீடியோ எடுக்கவும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் தகவல்களால் பல பயணிகள் குழப்பத்தில் உள்ளனர். ஆனால், இந்தத் தகவல்களில் துளியும் உண்மை இல்லை என்பதைப் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தற்போது திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளன.

India Airport Photography Rules India airport

போட்டோ

இந்திய விமான நிலையங்களின் உள்பகுதிகளில் புகைப்படம் எடுப்பதற்கான விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாதாரணப் பயணிகள் தங்கள் பயணத்தின் நினைவாக டெர்மினல் கட்டிடங்களுக்குள் செல்பி எடுப்பதோ அல்லது போட்டோ எடுப்பதோ வழக்கம் போலத் தொடரலாம். இதற்கு எந்தவிதத் தடையும் தற்போதைய நிலையில் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையால் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கு எடுக்கலாம்

பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள அனைத்து சிவில் விமான நிலையங்களின் டெர்மினல் கட்டிடங்களுக்குள் போட்டோ எடுக்க முழு அனுமதி உண்டு என்றே கூறப்படுகிறது. பயணிகள் செக்-இன் செய்யும் இடங்கள் மற்றும் பயணிகள் காத்திருப்பு அறைகளில் தாராளமாகப் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல், விமானத்தின் உள்ளே அமர்ந்திருக்கும்போது புகைப்படம் எடுப்பதற்கும் தற்போதைய விதிகளின்படி எவ்விதமான தடையும் இல்லை.

ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையங்களில் அமைந்துள்ள சிவில் என்கிளேவ் பகுதிகளிலும் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. உதாரணமாக, புனே, கோவா மற்றும் கவுகாத்தி போன்ற விமான நிலையங்களில் சிவில் பகுதிகள் இருக்கும் இடங்களில் பயணிகள் புகைப்படம் எடுக்கலாம். இது தொடர்பான உத்தரவு கடந்த 2004ஆம் ஆண்டிலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

எங்கு எடுக்கக்கூடாது

விமான நிலையத்தின் உள்பகுதியில் போட்டோ எடுக்க அனுமதி இருந்தாலும், ஏர்சைடு எனப்படும் விமானங்களுக்குப் பக்கத்தில் உள்ள பகுதிகளில் போட்டோ எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல பயணிகள் டெர்மினல் கட்டிடத்தைத் தாண்டி விமானத்தை நோக்கிச் செல்லும் வழி, ஏரோ-பிரிட்ஜ்கள் மற்றும் விமான நிலையப் பேருந்துகளில் செல்லும்போது புகைப்படம் எடுப்பது சட்டப்படி குற்றமாகும். பாதுகாப்பு காரணங்களுக்காகவே இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் இடங்கள், ஓடுதளங்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் இருக்கும் இடங்களை வீடியோ எடுப்பதும் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு எதிரானது. ஒருவேளை இத்தகைய இடங்களில் புகைப்படம் எடுக்க விரும்பினால், அதற்கு இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிலைய அதிகாரிகளிடம் முறையான முன் அனுமதி பெறுவது கட்டாயமாகும். அதேநேரம் பொதுமக்களுக்கு இத்தகைய அனுமதிகள் அவ்வளவு எளிதில் வழங்கப்படுவதில்லை.

ராணுவத்தின் கட்டுப்பாடு

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையங்கள் அல்லது விமானப் படைத் தளங்களுக்கு அருகே உள்ள சிவில் பகுதிகளில் பயணிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இத்தகைய விமான நிலையங்களில் ராணுவப் பாதுகாப்பு மண்டலங்கள் அல்லது ராணுவ விமானங்கள் இருக்கும் திசையில் கூட போட்டோ எடுக்கக்கூடாது. விமானத்தில் இருந்து இறங்கும்போதும் ஏறும்போதும் ராணுவத் தளவாடங்களை வீடியோ எடுக்கக்கூடாது.

விமான நிலையப் பாதுகாப்பு என்பது நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய விஷயம் என்பதால், பயணிகள் விதிகளுக்கு உட்பட்டுச் செயல்படுவது அவசியம். பாதுகாப்புப் பணியாளர்கள் போட்டோ எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தும்பட்சத்தில், அவர்களுடன் வாக்குவாதம் செய்யவே கூடாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+