டிரம்ப்-புதின் சந்திப்பு! “இது போருக்கான காலம் அல்ல..” இந்தியா வரவேற்பு!
டெல்லி: உக்ரைன் விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் அலாஸ்காவில் சந்தித்து பேச இருக்கின்றன. இதை இந்தியா வரவேற்றிருக்கிறது.
இந்த சந்திப்பை வரவேற்றிருக்கும் இந்தியா, இது போருக்கான காலம் இல்லை என்றும் தெளிவுப்படுத்தியிருக்கிறது. இந்த சந்திருப்பு உக்ரைன்-ரஷ்யா இடையே அமைதியை கொண்டு வரும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

உக்ரைன் விஷயத்தில்தான் இந்தியாவுக்கான வரியை அமெரிக்கா உயர்த்தியிருந்தது. இந்நிலையில் அமெரிக்கா-ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவது பாசிட்டிவ் விஷயமாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அடுத்த வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 15 அன்று அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அறிவித்தார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட இந்தப் பேச்சுவார்த்தையை இந்தியா வரவேற்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அலாஸ்காவில் ஆகஸ்ட் 15 அன்று நடைபெறவுள்ள சந்திப்பைப் பற்றி இந்தியா வரவேற்பதாக வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை குறிப்பிட்டது. "இந்தச் சந்திப்பு உக்ரைனில் நடந்து வரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அமைதிக்கான வாய்ப்புகளைத் திறக்கும்" என்றும் அந்த அறிக்கையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி பலமுறை வலியுறுத்தியது போல, "இது போருக்கான காலம் அல்ல" என்பதையும் வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியது. இந்த அறிவிப்பை ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டார்.
இந்த சந்திப்பு, 2015-க்குப் பிறகு புதின் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாகும். அவர் கடைசியாக அப்போதைய அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்திருந்தார். ட்ரூத் சோஷியல் தளத்தில் டிரம்ப் இது குறித்து பதிவிட்டிருந்தார்.
"எதிர்பார்க்கப்பட்ட எனக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் இடையிலான சந்திப்பு அடுத்த வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 15 அன்று அலாஸ்கா மாகாணத்தில் நடைபெறும். மேலும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்" என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications