Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோட்டை விட்ட இந்தியா.. சீனா மாஸ்டர் ஸ்ட்ரோக்.. தட்டி தூக்கப்பட்ட தஜிகிஸ்தான் ராணுவ தளம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா தஜிகிஸ்தான் நாடுகள் ஒப்பந்தப்படி, தஜிகிஸ்தான் நாட்டில் இந்தியாவுக்கு அய்னி என்கிற விமானப்படை தளம் செயல்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் இந்தியா அந்த விமானப்படை தளத்தை காலி செய்துவிட்டு வெளியேறியுள்ளது. இது இந்திய அரசியலிலும், உலகளவிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று மத்திய அரசு சொன்னாலும் இதன் பின்னணியில் சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் அழுத்தம் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே தஜகஸ்தானில் சீனா சத்தமே இல்லாமல் ஒரு சம்பவம் செய்துள்ளது.

இந்தியா - தஜிகிஸ்தான் நாடுகள் இடையே கடந்த 2000 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி அங்கு சோவியத் காலத்தில் கட்டப்பட்ட அய்னி விமானப்படை தளம் இந்தியாவுக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்தியாவிற்கு வெளிநாட்டில் இருந்த ஒரே ராணுவ தளம் அய்னி விமானப்படை தளம் தான்.

Tajikistan Airbase

அய்னி விமானப்படை தளம்

அங்கு போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான ஓடு பாதை, எரிபொருள் சேமிப்பு கிடங்கு, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு வசதிகளை இந்தியா அமைத்திருந்தது. கடந்த 20 வருடங்களில் மட்டும் அய்னி விமானப்படை தளத்தை மேம்படுத்த இந்தியா சுமார் 80 மில்லியன் டாலர் செலவு செய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் 25 வருடங்களுக்கு பிறகு அய்னி விமாப்படை தளத்தில் இருந்து இந்தியா வெளியேறியுள்ளது.

ஒப்பந்தம் நிறைவடைந்த காரணத்தால் இந்தியா அங்கிருந்து வெளியேறியதாக மத்திய அரசு கூறியுள்ளது. இருப்பினும் எதிர்க்கட்சிகள் இதைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மத்திய அரசின் தவறான கொள்கை முடிவுகளின் விளைவாக ஏற்பட்ட தோல்வியால் தான், அய்னி விமானப்படை தளத்தை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு என்று விமர்சித்து வருகிறார்கள்.

சீனா அழுத்தம்

புவியியல் ரிதீயாக இந்த விமானப்படை தளம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா நாடுகளுக்கு அருகில் உள்ளது. அதன் காரணமாக இது இந்தியாவின் ராணுவ வியூகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இந்தியா காலி செய்ததன் பின்னணியில் சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளின் தலையீடு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்தே இந்தியா தன் ராணுவப்படை மற்றும் உபகரணங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி வந்துள்ளது. சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் வகையில் அய்னி விமானப்படை தளம் இருந்தது.

இந்தியா தஜிகிஸ்தான் ஒப்பந்தம்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக போராடிய காலத்தில் இந்த படையை முதன் முதலில் பயன்படுத்தினார்கள். அந்த ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்யக் கூடாது என சீனா, ரஷ்யா நாடுகள் அழுத்தம் கொடுத்ததால் தஜிகிஸ்தான் தயக்கம் காட்டியுள்ளது. இதனால் ஒப்பந்தம் காலாவதியாகி வேறு வழியின்றி இந்தியா அய்னி விமானப்படை தளத்தில் இருந்து வெளியேறியுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு இந்தியா - மொரீஷியஸ் நாட்டுடன் இணைந்து வடக்கு அகலேகா தீவில் விமான தளம் மற்றும் துறைமுகத்தை கட்டினார்கள். இந்திய பெருங்கடலில் இந்தியாவின் தாக்கத்தை அதிகரிப்பதுடன், கிழக்கு ஆப்ரிக்கா கடற்கரையில் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிரான நடவடிக்கையாகவும் பார்க்கப்பட்டது.

இந்தியா அவுட்.. சீனா இன்

இந்தியாவுக்கு பூடான் நாட்டில் ராணுவ பயிற்சி குழு உள்ளது. பூடான் ராணுவம், காவல்படைக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 1971 இந்தியா - பாகிஸ்தான் போரின்போது இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசத்தில் இருந்து செயல்பட்டது. சீனாவுக்கு கிழக்கு ஆப்ரிக்காவான ஜி பௌட்டியில் வெளிநாட்டு ராணுவ தளம் செயல்பட்டு வருகிறது.

இதனால் தான் இந்தியா - தஜிகிஸ்தான் ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மறுபக்கம் தஜிகிஸ்தான் நாட்டில் சீனா ராணுவப்படை அமைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த தகவலை சீனா ஏற்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+