பாகிஸ்தானுக்கு பரவிய பயம்.. இந்திய விமானப்படையில் புதிய ஆயுதம்! சட்டென சைலன்ட் ஆன சீனா
டெல்லி: இஸ்ரேலின் 'லோரா' எனும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இந்தியா தனது சுகோய் Su-30MKI போர் விமானங்களில் பயன்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த முயற்சி வெற்றியடைந்தால், பக்கத்து நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா அச்சடையும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'முதலில் தாக்குதல்' என்பது ராணுவத்தில் மிக முக்கியம். முதல் தாக்குதல் எப்போதும் வெற்றிகரமானதாகவும், திரும்பி தாக்காத வகையிலும், பலமானதாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் இஸ்ரேலின் லோரா பாலிஸ்டிக் எவுகனை இந்திய விமானப்படைக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்த ஏவுகணை, எதிரிகளைத் தடுப்பது மட்டுமல்லாமல், அவர்கள் எதிர்வினை செய்யும் முன் அவர்களைத் தீர்க்கமாக முடக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சுகோய் ஜெட் விமானங்கள் தற்போது பிரம்மோஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது. அத்துடன் லோரா ஏவுகணைகளையும் இணைக்கும் பணியில் தற்போது இந்திய விமானப்படை தீவிரமாக இருக்கிறது.
இது சாத்தியமானால், இந்திய விமானப்படையில் சுகோய் விமானம், பிரமோஸ் ஏவுகணை மற்றும் லோரா ஏவுகணை ஆகியவை 'சூப்பர் ஸ்ட்ரைக் ட்ரையோ' ஆக இருக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். 'சூப்பர் ஸ்ட்ரைக் ட்ரையோ' என்பது விளையாட்டு துறையில் பயன்படுத்தப்படும் சொல். ஒரு அணியில், திறமையான, ஆதிக்கம் நிறைந்த மூன்று வீரர்களை இவ்வாறு குறிப்பிடுவார்கள்.
அப்படி பார்க்கும்போது இந்திய விமானப்படையில் சுகோய் விமானம், பிரமோஸ் ஏவுகணை மற்றும் லோரா ஏவுகணை ஆகியவை ஒருங்கிணைந்த வேகமான, துல்லியமான மற்றும் ஆழமான ஊடுருவல் தாக்குதல்களைச் செய்யக்கூடியது.
LORA ஏவுகணை என்றால் என்ன?
இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (IAI) மூலம் உருவாக்கப்பட்ட LORA ஏவுகணை, 400 முதல் 430 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இது 10 மீட்டருக்கும் குறைவான CEP (Circular Error Probability) கொண்டது. அதாவது இந்த ஏவுகணையை 100 முறை ஏவும்போது 50க்கும் அதிகமான முறை, இலக்கின் 10 மீ நெருக்கத்தில் தாக்கும். இது மிகவும் துல்லியமான தாக்குதலாகும். எனவே எதிரி பதுங்கு குழிகள், ஓடுபாதைகள் மற்றும் ராணுவ மையங்களைத் தாக்குவதற்கு இந்த ஏவுகணை ஏற்றதாக அமைகிறது.
இது செலவு குறைந்ததாக இருப்பது கூடுதல் சிறப்பாகும். இந்தியா தனது நிதிச்சுமையை அதிகரிக்காமல் தனது போர் திறனை மேம்படுத்த இது உதவுகிறது.
இந்திய விமானப்படை ஏற்கனவே சுகோய்-30MKIs இலிருந்து பிரம்மோஸ் ஏவுகணையை இயக்குகிறது. இது விமானப்படைக்கு ஒரு சக்திவாய்ந்த சூப்பர்சோனிக் ஆயுதத்தை அளித்துள்ளது. பிரம்மோஸ் ஏவுகணைகள், அதிகபட்சமாக 2.8 Mach வேகத்தில் செல்லக்கூடியது. மேலும் 290 முதல் 450 கிமீ வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. எதிரிகளின் ரேடார் நிலையங்கள், கடற்படை போர்க்கப்பல்கள் மற்றும் முக்கியமான இராணுவ உள்கட்டமைப்புகளை நிமிடங்களில் அழிக்கும் திறன் கொண்டது.
பிரம்மோஸ் எல்லைக்கு அருகிலுள்ள இலக்குகளை சாதனை நேரத்தில் அழித்துவிடும். அதே நேரத்தில், LORA எதிரி நாட்டு எல்லைக்குள் ஆழமாக ஊடுருவ அனுமதிக்கிறது. அதாவது PoK முதல் திபெத் வரையிலும், கராச்சி முதல் சின்ஜியாங் வரையிலும் எந்த இந்திய வீரரும் எல்லை கடக்காமல் தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications