இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.65 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா.. 3ஆவது நாளாக குறைந்த தொற்று!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,65,553 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 3ஆவது நாளாக 2 லட்சத்திற்கு கீழ் கொரோனா தொற்று குறைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா பாதிப்பு கணக்கெடுப்புகளை தினந்தோறும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

அதன்படி இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியே இருந்தது. ஆனால் நேற்று முன் தினம் முதல் இந்தியாவில் தினசரி பாதிப்பு குறைந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,65,553 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நேற்று ஒரே நாளில் 2,76,309 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீட்டுக்கு சென்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 3,460 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். இதுவரை இந்தியாவில் 2,78,94,800 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதுவரை இந்தியாவில் 2,54,54,320 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 3,25,972 பேர் பலியாகிவிட்டனர். மருத்துவமனைகளில் 21,14,508 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை இந்தியாவில் 21,20,66,614 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த மே 29-ஆம் தேதி வரை 34,31,83,748 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டன. நேற்று ஒரே நாளில் 20,63,839 சாம்பிள்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications