அவ்வளவு சீக்கிரம் விட்டுவிட மாட்டோம்.. பாக். இராணுவத் தளபதி அசிம் முனீருக்கு இந்தியா ஸ்ட்ராங் மெசேஜ்
டெல்லி: இந்திய மீது பாகிஸ்தான் அறிவிக்கப்படாத போரை தொடங்கியிருக்கிறது. இதற்கான பதிலடி கடுமையாக இருக்கும் என்று சொல்லப்படும் வரும் நிலையில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி அசீம் முனீரை அவ்வளவு சீக்கிரம் இந்திய ராணுவம் விட்டுவிடாது என்று சொல்லப்படுகிறது.
கடந்த காலங்களில் பாகிஸ்தான் நடத்திய அத்தனை அத்துமீறல்களுக்கும் சேர்த்து வைத்து இந்தியா தற்போது பதிலடி கொடுத்து வருகிறது.

பாகிஸ்தான் செய்தது என்ன?
ஒசாமா பின்லேடன் தொடங்கி பல பயங்கரவாதிகளை பாகிஸ்தான் தங்கள் நாட்டில் தங்கிக்கொள்வதற்கு அனுமதி கொடுத்திருக்கிறது. அவர்களை ஜிகாதிகள் என்றும், தியாகிகள் என்றும் அந்நாட்டு அரசு அதிகாரிகளே பாராட்டுகின்றனர். விளைவு கடந்த 22ம் தேதி பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனர். தொடக்கம் முதல் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு அவர்களை களையெடுத்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. ஆனால் பாகிஸ்தான் அதை செய்ய தவறிவிட்டது.
இந்தியாவின் பதிலடி:
பஹல்காம் தாக்குதலுக்கு 'தி ரெசிஸ்டன்ட் பிரன்ட்' எனும் அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. லக்ஷர் இ தொய்பா எனும் தீவிரவாத அமைப்பின் கிளைதான் இது. இந்த அமைப்புக்கு கடந்த காலங்களில் பாகிஸ்தான் அரசு அதிக அளவுக்கு உதவி செய்து வந்திருக்கிறது. எனவே பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. குறிப்பாக, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அதேபோல, பாகிஸ்தானியர்களுக்கான விசாவும் ரத்து செய்யப்பட்டன.
பாகிஸ்தானின் பதிலடி
சிந்து நதி நீரை நம்பி 24 கோடிக்கும் அதிகமான மக்கள் இருக்கிறார்கள். கடந்த காலங்களில் இரண்டு முறை இரு நாடுகளுக்கும் இடையில் போர் வந்திருக்கிறது. ஆனாலும் கூட நதிநீர் நிறுத்தப்படவில்லை. இப்போது அற்ப காரணங்களுக்காக இந்தியா நதி நீரை நிறுத்தியுள்ளது என்றும், இது போர் நடவடிக்கைக்கு ஒப்பானது எனவும் பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. மட்டுமல்லாது இரு நாடுகளின் எல்லையை நிர்ணயிக்கும் சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்தது.
தொடக்கப்புள்ளி
இதெல்லாம் இரு நாடுகளுக்கு இடையேயான உரசல்களை அதிகரித்தது. இந்நிலையில்தான் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இந்திய ராணுவமும், விமானப்படையும் சேர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது, ஆபரேஷன் சிந்தூர் என்கிற பெயரில் குண்டு வீசி தாக்குதலை நடத்தியது. நமது வீரர்கள் யாரும் எல்லை தாண்டாமல் இந்த நடவடிக்கை துல்லியமாக மேற்கொள்ளப்பட்டது. இது பாகிஸ்தானுக்கு கவுரவ பிரச்சனையாக மாற, தற்போது பதில் தாக்குதலை தொடங்கியுள்ளது.
பாகிஸ்தானின் தாக்குதல்
நேற்றிரவு இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் இறங்கியது. இவற்றில் பெரும்பாலானவற்றை இந்திய வான் பாதுகாப்பு அம்சம் தடுத்து அழித்தது. ஆனால் ஜம்மு காஷ்மீரில் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் பாகிஸ்தான் குண்டுகளை வீசியிருக்கிறது. மட்டுமல்லாது நேற்றிரவு ஜம்மு கஷ்மீரின் சம்பா மாவட்ட பகுதியில் பாகிஸ்தான் ஊடுருவ முயன்றது. இதனை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நவ்ஷேரா பகுதியில், பாகிஸ்தானின் இரண்டு ட்ரோன்கள் இந்திய இராணுவத்தால் வீழ்த்தப்பட்டன. இந்த தடுப்பு நடவடிக்கையில் நமக்கு பெரிதும் கை கொடுத்தது 'ஆகாஷ்' எனப்படும் இந்திய தயாரிப்பு ஏர் டிபென்ஸ் மிசைல் அமைப்புதான்.
இப்படி அறிவிக்கப்படாத போரை பாகிஸ்தான் தொடங்கியுள்ளதால், அந்நாட்டு ராணுவ தளபதியே நினைத்தாலும் கூட எதிர் தாக்குதலிலிருந்த பின் வாங்க முடியாது என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா கூறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications