டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லையில் கிராமம்.. சீனா ஆக்கிரமிப்பை இந்தியா ஒருபோதும் ஏற்காது.. நியாயப்படுத்தாது: வெளியுறவு துறை

சீனாவின் ஆக்கிரமிப்பை இந்தியா ஏற்காது என வெளியுறவு துறை தெரிவித்துள்ளது

Google Oneindia Tamil News

டெல்லி: சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா எந்த காலத்திலும் ஏற்காது என்று வெளியுறவு அமைச்சகம் உறுதிபட தெரிவித்துள்ளது.

Recommended Video

    China ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.. India கொடுத்த பதில்

    இந்திய - சீனா எல்லை விவகாரம் தொடர்ந்து நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, சீனாவின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முன்னேற்றங்கள் அடங்கிய அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பாதுகாப்புத்துறை ஒரு அறிக்கை சமர்ப்பித்திருந்தது..

     அத்தை வீட்டிற்கு.. கொட்டும் மழையில் நடந்து சென்ற 10 வயது சிறுமி.. மின்சாரம் தாக்கி பலி.. சென்னையில்! அத்தை வீட்டிற்கு.. கொட்டும் மழையில் நடந்து சென்ற 10 வயது சிறுமி.. மின்சாரம் தாக்கி பலி.. சென்னையில்!

    அதில், அருணாச்சலப்பிரதேசத்தில் சீனா, 100க்கும் அதிக வீடுகளை கட்டியுள்ளதாகவும், வடகிழக்கு மாநிலமான அருணாச்சல் எல்லையை ஒட்டிய பகுதியில் அதி நவீன கிராமம் ஒன்றை சீனா கட்டி வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

    எல்லைப்பகுதி

    எல்லைப்பகுதி

    இந்திய எல்லைப்பகுதிகளில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில், அமெரிக்க ராணுவம் இந்த ஆக்கிரமிப்பை சுட்டிக்காட்டியிருந்தது. மேலும், அதற்கான செயற்கைக்கோள் புகைப்படங்களை அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்டிருந்தது. எல்லையில் பதற்றத்தை குறைப்பதற்காக இந்திய ராணுவத்துடன் சீன ராணுவம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அதேவேளையில், இதுபோன்ற ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதால் எல்லைப்பகுதியில் அழுத்தம் அதிகரிக்கிறது" என்று அதில் கூறப்பட்டிருந்தது.

    பாதுகாப்புத்துறை

    பாதுகாப்புத்துறை

    அமெரிக்க பாதுகாப்புத்துறையின் அறிக்கை குறித்து விளக்கம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும், இதுகுறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதில் அளித்திருந்தது. இந்நிலையில், சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா எந்த காலத்திலும் ஏற்காது என்று வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி சொன்னதாவது:

    இறையான்மை

    இறையான்மை

    "அமெரிக்காவின் இந்த அறிக்கை குறித்து இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது, எல்லையில் நடந்து வரும் நடவடிக்கைகளை இந்தியா கவனித்து கொண்டுதான் இருக்கிறது.. நாட்டின் இறையான்மையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்து வருகிறது.. சீனா இப்படித்தான் பல வருஷமாகவே ஆக்கிரமிப்புகளை செய்து வருகிறது..

    கட்டுமானங்கள்

    கட்டுமானங்கள்

    சட்டவிரோத கட்டுமானங்களையும் மேற்கொண்டு வருகிறது.. ஆனால் சீனாவின் இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஒருக்காலும் ஏற்றுக்கொள்ளாது.. அதுமட்டுமல்ல, சீனாவின் நியாயமற்ற உரிமைக்கோரலையும் இந்தியா ஏற்காது... நியாயப்படுத்தவும் செய்யாது. சீனா இப்படி தொடர்ந்து அத்துமீறல்களை செய்து கொண்டு இருப்பதற்கு தூரதக ரீதியிலும் இந்தியா கண்டனத்தை தெரிவித்து வருகிறது..

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    இப்போது மட்டுமல்ல, எப்போதுமே இந்தியா தன்னுடைய கண்டனத்தையும் எதிர்ப்பையும் தொடர்ந்து பதிவு செய்யும்.. இப்போதைக்கு இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், எல்லை பகுதிகளுக்கு பாதுகாப்பு படையினர் துரிதமாக செல்வதற்காகவும், எல்லையில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சீனாவுடனான எல்லை பகுதியில் சாலைகள், பாலங்கள், என உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது.

    English summary
    India will never accept Chinas illegal occupation, says External Affairs Ministry
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X