எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில்.. பாகிஸ்தானுக்கு 'தண்ணி' காட்டிய இந்தியாவின் ATGM அஸ்திரம்!
டெல்லி: இந்தியா எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இந்தியா தன்னிடம் உள்ள பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணையை (ATGMs) பயன்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகின்றன. பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இந்த பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை குறித்த விவரங்களை பார்க்கலாம்.
பாகிஸ்தான் ராணுவம் விடிய விடிய நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்திய வான்பரப்புக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோன்களை இந்திய பாதுகாப்பு படை தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் அழித்தது. அதுமட்டும் இன்றி அத்து மீறிய பாகிஸ்தானுக்கு பதிலடியையும் கொடுத்தது.

எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணை
எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இந்தியா தன்னிடம் உள்ள பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணையை (ATGMs) பயன்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகின்றன. பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இந்த பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை குறித்த விவரங்களை பார்க்கலாம்.
Anti-Tank Guided Missile என்ற இந்த ஏவுகணை சக்தி வாய்ந்த கவச ஆயுதங்கள் குறிப்பாக பீரங்கிகள் உள்ளிட்டவற்றை அழிக்கும் வல்லமை கொண்டது. இந்த ஏவுகணை வழிகாட்டி என்று சொல்லப்படுவதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. அதாவது, இந்த ஏவுகணை இலக்குகளை நோக்கி வளைந்து நெளிந்தும் செல்லக்கூடியது.
சிறப்பம்சங்கள் என்ன?
இதனால், இது முந்தைய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை விட மிக துல்லியமாக தாக்கும். இவற்றை தோளில் வைத்தோ, அல்லது ஸ்டேண்டில் வைத்தோ , வாகனங்களில் வைத்தோ, போர் விமானங்களில் வைத்தோ என எதில் வேண்டுமானாலும் வைத்து தாக்குதல் நடத்த முடியும். இதன் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் பாதுகாப்பான தொலைவில் இருந்துகொண்டே கவச வாகனங்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள முடியும்.
இது எப்படி செயல்படுகிறது ?
பெரும்பாலான பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் முன்பகுதியை கொண்டு இருக்கும். இதன் அனைத்து சக்திகளும் ஒரே திசையில் குவிக்கப்பட்டு இருக்கும் ஒரு சிறப்பு வகை ஆயுதம் ஆகும். கவச வாகனங்களை தாக்கும் அளவிற்கு வலிமை மிக்கதாக இருக்கும். பகல் , இரவு என எந்த வகையிலான சூழலிலும் இதை பயன்படுத்த முடியும். இதில் டாப் அட்டாக் மோட் என்ற ஒரு ஆப்ஷனும் உள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால், டாங்கிகள் எந்த இடத்தில் தாக்கினால் அழிக்கப்படுமோ அந்த இடத்தில் குறிவைத்து தாக்கும் திறன் கொண்டது.
இந்தியா பாகிஸ்தான் மோதல்
பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலையடுத்து இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.
இந்தியாவின் எல்லையோர நகரங்களை குறிவைத்து டிரோன் தாக்குதலை நடத்த முயன்றது. இந்த தாக்குதலை இந்தியா தனது சுதர்சன சக்கரம் எனப்படும் எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு மூலம் தாக்கி அழித்தது. நேற்றும் விடிய விடிய டிரோன்கள் மூலமாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சித்தது. இவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து வருகிறது.
பாகிஸ்தான் அத்துமீறல் தொடரும் என ராணுவம் கருதுவதால் எல்லையோர மாநிலங்கலில் ஹை அலர்ட்டில் உள்ளது. தாக்குதல் அச்சுறுத்தல் ஏற்படும் போது சைரன்கள் ஒலிக்கவிட்டு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications