நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் LIVE: இன்று தொடங்குகிறது 2ம் கட்ட அமர்வு.. எகிறும் எதிர்பார்ப்பு
மாநிலங்களவையில்தான் இந்த கூட்டத்தொடரில் அதிக மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது. நாடாளுமன்ற கூட்ட தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடந்தது. இரண்டாவது அமர்வு நாளை மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடக்கும்.
மொத்தம் இரண்டு அமர்வுகளாக இந்த நீண்ட கூட்டத்தொடர் நடக்க உள்ளது. மாநிலங்களவையில்தான் இந்த கூட்டத்தொடரில் அதிக மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மொத்தம் 26 மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் மட்டும் நிறைவேற்றப்படும். மக்களவையில் 9 மசோதாக்கள் மட்டும் நிறைவேற்றப்படும். மொத்தமாக இப்படி 35 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் கூட்டுறவுச் சங்கம் தொடர்பான மசோதா அமைச்சர் அமித் ஷா மூலம் நிறைவேற்றப்பட உள்ளது. எதிர்க்கட்சிகள் பல முக்கியமான விஷயங்களை இன்று நாடாளுமன்றத்தில் முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் சிபிஐ மூலம் குறி வைக்கப்படுவதற்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு எம்பிக்கள் பெரும்பாலும் நீட் விவகாரம், ஆன்லைன் ரம்மி விவகாரம் தொடர்பாக கோரிக்கைகளை வைக்க வாய்ப்பு உள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பான முக்கிய அப்டேட்களை இங்கே நீங்கள் காணலாம்.













Click it and Unblock the Notifications