இந்தியா தனது பிரச்சினைகளை தீர்க்க பிற நாடுகளை சார்ந்திருக்காது! நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை
டெல்லி: உலக நாடுகள் இந்தியாவை பார்த்த விதம் மாறி உள்ளது. நம் நாட்டின் பிரச்சனைகளை தீர்க்க உலக நாடுகளை நாம் நம்பி இருக்கும் நிலை சென்றுவிட்டது. இந்தியா யாரையும் நம்பி இல்லை, என்று குடியரசுத் தலைவர் தனது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
2023ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கிறது.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி வருகிறார். இன்று குடியரசுத் தலைவர் உரையுடன் அவை நடவடிக்கைகள் முடிவடையும். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார். இன்று மக்களவை, மாநிலங்களவை என இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் இறுதியில் அந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நடைபெறும். அந்த வகையில் இன்று இந்த கூட்டத்தொடர் தொடங்குகிறது.

குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவர் தனது உரையில், 2047க்குள் நமது நாட்டை புதிய உயரத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். கடந்த காலத்தின் பெருமையை மறக்காமல் நவீனத்துவமும் சேர்ந்த ஒரு நாட்டை உருவாக்க வேண்டும். பொன்னான வரலாற்றை கொண்ட ஒரு தேசத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும். தற்சார்பு கொண்ட 'ஆத்மநிர்பர்' திறன் உள்ள ஒரு நாட்டை நாம் உருவாக்க வேண்டும். மனிதாபிமான கடமைகளை நிறைவேற்றும் திறன் கொண்ட இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும்.

இந்தியாவின் சுயமரியாதை
ஜம்மு காஷ்மீரின் 370வது சட்ட பிரிவை நீக்கியது முக்கியமான நடவடிக்கை. முத்தலாக் தடை இந்த அரசு எடுத்த முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று. இந்தியாவின் சுயமரியாதை தற்போது உச்சத்தில் இருக்கிறது. உலக நாடுகள் இந்தியாவை பார்த்த விதம் மாறி உள்ளது. நம் நாட்டின் பிரச்சனைகளை தீர்க்க உலக நாடுகளை நாம் நம்பி இருக்கும் நிலை சென்றுவிட்டது. இந்தியா யாரையும் நம்பி இல்லை. உலக பிரச்சனைகளுக்கு இந்தியா தீர்வளித்து வருகிறது.

தீர்க்கமான இந்தியா
இந்தியாவில் நிலையான, அச்சமற்ற மற்றும் தீர்க்கமான அரசாங்கம் உள்ளது.இந்திய அரசு பெரிய கனவுகளை நனவாக்கும் நோக்கில் செயல்படுகிறது. வறுமையற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும். இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர் வளர்ச்சி அடைய வேண்டும். இளைஞர்கள், பெண்கள் நாட்டை வழிநடத்தும் விதமாக வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். இந்திய இளைஞர்கள் உலகிற்கே முன்னோடியாக இருக்க வேண்டும்.

குடிநீர்
இந்திய அரசு சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் எந்தவித பாகுபாடும் இன்றி உழைத்துள்ளது. பல அடிப்படை வசதிகள் 100% மக்கள்தொகையை எட்டியுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளின் விளைவாக இந்த சாதனையை படைத்துள்ளோம்.ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளில் சுமார் 11 கோடி குடும்பங்கள் பலன் அடைந்துள்ளன. 11 கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. ஏழைக் குடும்பங்கள் இதன் மூலம் அதிகபட்ச பலனைப் பெறுகின்றன என்று குடியரசுத் தலைவர் தனது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications