Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகேஸ்வரியை தாக்கியது "கொரோனா" வைரஸ்.. சீனாவை தொடர்ந்து உலுக்கும் பீதி.. சூடு பிடிக்கும் ஆய்வுகள்!

சீனாவில் இந்திய ஆசிரியைக்கு கரோனா தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    China Corona virus infection | உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்... நடுங்கும் நாடுகள்

    டெல்லி: சீனாவையே கதிகலங்க வைத்து வரும்.. கொரோனா வைரஸ் தொற்று இந்திய ஆசிரியை ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது... பிரீத்தி மகேஸ்வரி என்பது அவரது பெயர்.. தொற்று ஏற்பட்ட முதல் வெளிநாட்டவரான பிரீத்திக்கு மிக தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கொரோனா வைரஸ்தான் இப்போதைக்கு உலகை நடுநடுங்க வைக்கும் கொடிய நோய்... இப்படி ஒரு வைரஸ் நோய் கடந்த 2002 - 2003ம் ஆண்டில் இதே சீனா, ஹாங்காங்கில்தான் உருவானது.. அப்போதே 650 பேர் உயிரிழந்துவிட்டனர்..
    இப்போது திரும்பவும் மத்திய நகரமான வுஹானில் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது.

    சாதாரண சளி, இருமல் பிரச்சனையை போலதான் இதன் அறிகுறி இருக்கும்.. ஆனால், பாதிப்போ உயிரை கொல்லும் அபாயத்தை உடையது.. நாள்தோறும் சீனாவில் இருந்தும் ஏராளமானோர் பிற நாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார்கள். அதனால் உலக அளவிலேயே இந்த கொரோனா வைரஸை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கிருமிகள்

    கிருமிகள்

    இந்த வைரஸ் டைரக்டாக நுரையீரலை தாக்கி.. நிமோனியா காய்ச்சலில் கொண்டு போய் விட்டுவிடுமாம்.. வைரஸ் கிருமிகள் காற்றில் பரவும் தன்மை கொண்டதால், ஒரே நேரத்தில் பலருக்கும் தொற்று ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள்.. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் இருமினாலும், தும்மினாலும், சளியை துப்பினாலும், அதில்கூட வைரஸ் காற்றில் கலந்துவிடுமாம்.. அதை சுவாசித்தால் மற்றவர்களுக்கும் தொற்றிக் கொள்ளுமாம்.

    தடுப்பு நடவடிக்கை

    தடுப்பு நடவடிக்கை

    இந்த வைரஸ் எப்படி பரவுகிறது, அது எப்படி இருக்கும்? இதை தடுக்க என்ன மருந்து இது எதுவுமே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.. ஆனால் அதற்குள் 200 பேர் பாதிக்கப்பட்டுவிட்டார்கள். இவர்கள் எல்லோருமே சீனாவில் இருந்து திரும்பிய பயணிகள் என்பதுதான் அடுத்த அதிர்ச்சி!

    ஆசிரியை

    ஆசிரியை

    குறிப்பாக தெற்கு சீனாவின் ஷென்சானில் சிலருக்கு இந்த பாதிப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த ஷென்சான் நகரிலுள்ள பள்ளி ஒன்றில்தான் இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் டீச்சராக வேலை பார்க்கிறார்.. அவர் பெயர் பிரீத்தி மகேஸ்வரி... 45 வயதாகிறது.. இவருக்கு இந்த தொற்று ஏற்பட்டுள்ளது.. கடந்த வெள்ளிக்கிழமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்றுதான் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    முன்னெச்சரிக்கை

    முன்னெச்சரிக்கை

    இந்த தொற்று ஏற்பட்ட முதல் வெளிநாட்டவர் பிரீத்திதான்.. இப்போது இவர் தீவிரமான சிகிச்சையில் உள்ளார்.. கொரோனா வைரசின் பாதிப்பினை தடுக்க, இந்தியா எந்தவிதமான முன்னெச்சரிக்கையை எடுக்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு உலக சுகாதார அமைப்பை அணுகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+