இந்திரா காந்தி செய்தது மிகப்பெரும் தவறு.. அவர் உயிரே போச்சு! காங்கிரஸ் எம்பி ப சிதம்பரம் பரபர பேச்சு
டெல்லி: ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தவறான பாதையில் சென்றுவிட்டது. நான் அதை ஒப்புக்கொள்கிறேன். ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தவறுக்காக இந்திரா காந்தி தனது உயிரை பறிகொடுத்தார் என்று காங்கிரஸ் எம்பி ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். ராணுவம் பொற்கோயிலில் நடத்திய 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' நடவடிக்கை சீக்கிய சமூகத்தை ஆழமாக புண்படுத்தியதாகவும், அது வரலாற்று பிழையாகும் என்றும் அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ப. சிதம்பரம். ராஜ்யசபா எம்பியாக உள்ள ப. சிதம்பரம் உள்துறை, நிதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் அமைச்சராக காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த ப. சிதம்பரம் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக உள்ள நிலையில், அவர் தெரிவித்து இருக்க கூடிய கருத்து ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ப. சிதம்பரம் கூறியிருப்பதாவது:
"ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தவறான பாதையில் சென்றுவிட்டது. நான் அதை ஒப்புக்கொள்கிறேன். ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தவறுக்காக இந்திரா காந்தி தனது உயிரை பறிகொடுத்தார். ஆனால் அந்த தவறு என்பது ராணுவம், காவல்துறை, உள்துறை, சிவில் சேவைகள் என அனைத்தும் செய்த கூட்டு தவறு ஆகும். இந்திரா காந்தியை மட்டும் தவறு கூற முடியாது" என்றார்.
ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ப. சிதம்பரம் இவ்வாறு பேசினார். ப. சிதம்பரத்தின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்றால் என்ன?
இந்தியாவில் சீக்கியர்கள் வசிக்கும் பஞ்சாப் உள்ளிட்ட மாநில பகுதிகளை ஒருங்கிணைத்து "காலிஸ்தான்" எனும் சீக்கியர் தனிநாடு பெறுவதற்கான ஆயுதப் போராட்டத்துக்கு பிந்தரன்வாலே தலைமை வகித்தார். இந்திய அரசுக்கு மிகப் பெரும் சவாலாக இருந்தது பிந்தரன்வாலேவின் காலிஸ்தான் விடுதலை இயக்கம்.
சீக்கியர்களின் புனித வழிபாட்டுத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவில்தான் பிந்தரன்வாலே உள்ளிட்டவர்களின் புகலிடமாக இருந்த நிலையில், அவர்களை ஒழித்துக்கட்ட 1984-ம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி முதல் ஜூன் 10-ந் தேதி வரை இந்திய ராணுவம் ஆக்ஷனில் இறங்கியது. இதற்கு ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்று பெயரிடப்பட்டது.












Click it and Unblock the Notifications