ஒரு மணி நேரத்தை கூட தாண்டாத பட்ஜெட் உரை.. நிர்மலா சீதாராமன் பேசியது எத்தனை நிமிடம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் உரையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 58 நிமிடங்கள் ஆற்றினார்.

2024-2025 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில் இன்றைய தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

Interim Budget 2024-2025: Nirmala budget speech less than an hour

அவர் தனது பட்ஜெட் உரையில், இந்திய பொருளாதாரம் முன்னேறி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் பெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் பல்வேறு திட்டங்களால் நாடு பெரு வளர்ச்சியை கண்டுள்ளது. வளர்ச்சியின் பலன்கள் ஏழை மக்களை அடையத் தொடங்கியுள்ளது. மக்கள் எங்களுக்கு வலுவான பெரும்பான்மை அளிப்பார்கள். எங்களின் வளர்ச்சி பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவர் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, கார்ல்சனை வென்றுள்ளார். இந்தியாவில் 80 செஸ் வீரர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். சமூகநீதி என்பது அரசியல் வாக்கியமாக இருந்ததை திட்டங்களுக்கான மந்திரமாக நாம் பயன்படுத்துகிறோம். 34 லட்சம் கோடி உதவித்தொகை நேரடியாக ஏழை மக்களின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.

ஏழைகளின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றமாக கருதி செயல்படுகிறோம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அவருடைய இந்த பட்ஜெட் உரை 58 நிமிடங்கள் நீடித்தன.

ஒரு மணி நேரத்தை விட குறைந்த உரையையே நிர்மலா நிகழ்த்தினார். கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் தனது பட்ஜெட் உரையை 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு ஆற்றினார், கடந்த 2023 ஆம் ஆண்டு 87 நிமிடங்கள் பட்ஜெட் உரை இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+