ஓபிஎஸ்ஸுக்கு இருந்த அந்த வழி காலி.. பெரிதும் நம்பிய பன்னீர்.. மொத்தமா முடிச்சுவிட்ட சுப்ரீம் கோர்ட்!
டெல்லி : பொதுக்குழுவில் நீதிமன்ற உத்தரவை மீறி ஈபிஎஸ் தரப்பு செயல்பட்டதால் முடிவு தனக்கு சாதகமாக வரும் என ஓபிஎஸ் எதிர்பார்த்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவு ஓபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவிருந்த நிலையில் இந்த வழக்கிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது ஓபிஎஸ் தரப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் நீதிமன்ற உத்தரவை மீறிச் செயல்பட்டதாக, பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, அவைத் தலைவராக நியமிக்கப்பட்ட தமிழ்மகன் உசேன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டுமென கோரப்பட்டது.

பொதுக்குழு தொடர்பான வழக்கு
இதற்கிடையே ஜூன் 23ஆம் தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ணா முராரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஜூலை 11ம் தேதி நடக்க உள்ள அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறியுள்ள உச்சநீதிமன்றம், அக்கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது எனத் தெரிவித்துள்ளது.

எடப்பாடி தரப்பு வாதம்
இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், நிர்வாகிகளின் ஆதரவை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நடத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும். உயர்நீதிமன்றம் உத்தரவிற்கு எதிராக நாங்கள் செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை தான் உயர்நீதிமன்றம் தலையிட முடியும். உட்கட்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றம் எல்லை மீறி நடந்து கொண்டது எனத் தெரிவித்தார்.

ஓபிஎஸ் வாதம்
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒருங்கிணைப்பாளர்கள் ஒப்புதல் அளிக்கும் தீர்மானங்களை மட்டும்தான் பொதுக்குழுவில் நிறைவேற்ற முடியும். உச்சநீதிமன்ற வழக்கால் உயர்நீதிமன்ற வழக்கின் விசாரணை பாதிக்கப்படக்கூடாது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாது என வாதிட்டார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தடை
இதையடுத்து நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழுவை எப்படி நடத்த வேண்டும் என நீதிமன்றம் வழிகாட்ட முடியாது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலையிட விரும்பவில்லை. உங்கள் கட்சி தொடர்பான எல்லா பிரச்னைகளை பொது குழுவில் விவாதியுங்கள், நீதிமன்றத்தில் விவாதிக்காதீர்கள். சென்னை உயர்நீதிமன்ற அதிகாரத்தை நாங்கள் எடுத்து கொள்ள முடியாது. பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதில் என்ன நீதிமன்ற அவமதிப்பு உள்ளது? ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற உத்தரவு மற்றும் அவமதிப்பு வழக்கிற்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டுள்ளது.

ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவு
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உற்சாகமடைந்துள்ளனர். பொதுக்குழுவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளதால் ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்க எந்தச் சிக்கலும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுக்குழுவை தடுக்கவும் ஈபிஎஸ் பொதுச் செயலாளர் ஆவதை தடுக்கவும் முயற்சித்த ஓபிஎஸ் தரப்பு கவலையடைந்துள்ளது.

பெரிதும் நம்பிய பன்னீர்
சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவை மீறி அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டதும், 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதும், அடுத்த பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என தமிழ் மகன் உசேன் அறிவித்ததும் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என வாதங்களை முன்வைப்பதால் தங்கள் தரப்புக்கு சாதகமான முடிவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் என எதிர்பார்த்து வந்தது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு.
Recommended Video

இனி என்ன?
ஆனால், உச்சநீதிமன்றம் இந்த வழக்கிற்கு தற்போது தடை விதித்துள்ளதால், ஓபிஎஸ் முன்பு இருந்த முக்கியமான வழி மூடப்பட்டுள்ளது. இனி பொதுக்குழுவை நடத்த விடாமல் தடுப்பது சிரமமான காரியம் என்பதால், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆவதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த ஓபிஎஸ் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
-
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications