படையப்பால ரஜினி செஞ்சதெல்லாம் ஜுஜுபி.. இந்த பாட்டி வீடியோவைப் பார்த்தா அசந்து போய்டுவீங்க!
நாகப் பாம்பை மூதாட்டி ஒருவர் கையில் பிடித்தப்படி நடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
டெல்லி: மூதாட்டி ஒருவர் நாகப் பாம்பை கையில் பிடித்து தூக்கி வீசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பாம்பை பார்த்தால் படையும் நடுங்கும் என ஒரு பழமொழி தமிழில் இருக்கிறது. அந்த அளவுக்கு பயத்தை ஏற்படுத்தக்கூடியவை கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்புகள்.
அதிலும் நல்லபாம்பு என்றால் கேட்கவே வேண்டாம். படம் எடுக்கும் நாகத்தை சாமியாக வழிபடுபடக்கூடியவர்கள் நம் மக்கள். நாகத்தை பார்த்தாலே பலருக்கு கைகால் எல்லாம் நடுநடுங்க ஆரம்பித்துவிடும்.

தைரியமான மூதாட்டி
ஆனால் நம் செய்தியின் நாயகியான இந்த மூதாட்டிக்கோ நல்லப்பாம்பு எல்லாம் எறும்பு மாதிரி. 5 அடி நீள நல்லப்பாம்பை அசால்டாக பிடித்து தூக்கி அடித்துவிடுகிறார் இந்த பாட்டி. இவர் அநாயசமாக பாம்பு ஒன்றை கையில் பிடித்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

நல்லப்பாம்பை தூக்கியடிக்கும் பாட்டி
சம்பந்தப்பட்ட அந்த வீடியோவில், ஒரு நல்லபாம்பின் வாலைப் பிடித்து தரதரவென இழுத்து வருகிறார் அந்த பாட்டி. பாட்டியின் செயலால் மிரண்டு கிடக்கும் பாம்பு, எதிர்த்து தாக்க முடியாமல் பாட்டி இழுத்த இழுப்புக்கு செல்கிறது. சிறிது தூரம் பாம்பை இழுத்து செல்லும் பாட்டி. ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் அதை ஒரு சுழட்டு சுழட்டி தூக்கி வீசுகிறார்.

வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா
பாட்டியின் இந்த பாம்பு வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், "பாம்பை கையாளும் முறை இதுவல்ல பாட்டிமா", என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாட்டிக்கு பாராட்டு
இந்த வீடியோவை அவர் வெளியிட்ட சிறிது நேரத்தில் சுமார் இரண்டு லட்சம் பேர் பார்த்து அதிர்ந்து போய்விட்டனர். பின்னே, நல்ல பாம்பை ஒரு பாட்டி இப்படி அசால்டாக பிடித்து சுழட்டி அடித்தால் அதிர்ச்சியாகாமல் என்ன செய்ய முடியும்? இருப்பினும் பாட்டியில் தைரியத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications