விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும்.. இஸ்ரோவின் ககன்யான் திட்டம்.. விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றி
டெல்லி: ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படும் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
Recommended Video
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் எனப்படும் இஸ்ரோ புவியின் தாழ் வட்டப்பாதைக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. ககன்யான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படும் இன்ஜின் சோதனை இன்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நெல்லையிலுள்ள காவல்கிணறு மகேந்திரகிரியின் இஸ்ரோ மையத்தில் இந்த சோதனை நடைபெற்றது.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜி.எஸ்.எல்.வி எம்.கே.ஐ.ஐ வாகனத்தின் திரவ ஆற்றல் விகாஸ் இன்ஜினின் சோதனை வெற்றிகரமாக முடிந்தது. இந்த சோதனையில் 240 நொடிகளுக்கு இன்ஜின் இயக்கப்பட்டது. நாங்கள் எதிர்பார்த்தபடியே முடிவுகள் அமைந்தது" என அதில் கூறப்பட்டுள்ளது.
ககன்யான் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நான்கு இந்திய வீரர்கள் இப்போது ரஷ்யாவில் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications