4 நாளில் 3 முறை துப்பாக்கி சூடு.. டெல்லி தென்கிழக்கு டிசிபி பணியிட மாற்றம்.. தேர்தல் ஆணையம் அதிரடி
டெல்லியில் நடந்து வரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் அடுத்தடுத்து மூன்று முறை துப்பாக்கி சூடு நடந்துள்ள நிலையில் டெல்லி தென் கிழக்கு துணை போலீஸ் கமிஷ்னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
டெல்லி: டெல்லியில் நடந்து வரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் அடுத்தடுத்து மூன்று முறை துப்பாக்கி சூடு நடந்துள்ள நிலையில் டெல்லி தென் கிழக்கு துணை போலீஸ் கமிஷ்னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி தென் கிழக்கு துணை போலீஸ் கமிஷ்னர் சின்மோய் பிஸ்வால் அவரின் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் இந்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக தயாராகி வருகிறது. இதனால் டெல்லி போலீஸ் தற்போது தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் சிஏஏவிற்கு எதிராக அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் கடந்த வாரம் உள்ளே புகுந்த நபர் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்.

அவர் இப்படி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு கல்லூரி மாணவர் கையில் காயம் அடைந்தார்.துப்பாக்கியால் சுட்ட நபரின் பெயர் ராம் பகத் கோபால். இவர் 18 வயது கூட நிரம்பாத சிறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவரை போலீசார் 14 நாட்கள் காவலில் எடுத்துள்ளார். இந்த நிலையில் அதன்பின் இரண்டு நாட்கள் கழித்து டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலை அருகே இருக்கும் ஷாகீன் பாக் பகுதியிலும் துப்பாக்கி சூடு நடந்தது. அங்கு சிஏஏவிற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜாமியா மிலியா பல்கலையில் நேற்று நள்ளிரவில் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இரண்டு பேர் பைக்கில் வந்து சரமாரியாக சுட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் 4 நாட்களில் இப்படி 3 முறை அங்கு துப்பாக்கி சூடு நடந்துள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த துப்பாக்கி சூடு நடந்த ஜாமியா மிலியா பல்கலை, ஷாகீன் பாக் ஆகிய இரண்டு பகுதிகளும் தென் கிழக்கு டெல்லியில் இருக்கிறது.
இதனால் டெல்லி தென் கிழக்கு துணை போலீஸ் கமிஷ்னர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி தென் கிழக்கு துணை போலீஸ் கமிஷ்னர் சின்மோய் பிஸ்வால் அவரின் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கூடுதல் துணை கமிஷ்னர் குமார் கியானேஷ் அந்த பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications