கள்ளக்குறிச்சி விவகாரம்: கையில் எடுத்த ஜேபி நட்டா.. காங்கிரஸ் கார்கேவுக்கு பரபரப்பு கடிதம்
டெல்லி: தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை கள்ளக்குறிச்சி சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அதிமுக, பாஜக உள்ளிட எதிர்க்கட்சிகள் சிபிஐ விசாரணை கோரி வருகின்றன. இதனிடையே, கள்ளக்குறிச்சி விவகாரத்தை பாஜக தேசிய தலைமையும் கையில் எடுத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் கார்கேவிற்கு இது தொடர்பாக பரபரப்பு கடிதம் ஒன்றை பாஜக தலைவர் ஜேபி நட்டா எழுதியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 100 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல், மயக்கம், வயிற்று வலி, வயிற்று போக்கு, வாந்தி உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட 58 பேர் பலியாகிவிட்டனர். மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெறுகிறார்கள்.

இவர்களில் ஆபத்தான முறையில் சிலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மொத்த தமிழகத்தையே இந்த சம்பவம் உலுக்கிய நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, அவருடைய சகோதரர் தாமோதரன், அவருடைய மனைவி சந்திரா ஆகியோர் இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராய விவகாரத்தில் ஆளும் திமுக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தின. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக இன்று ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பாஜக மனு அளித்தது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜேபி நட்டா கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
விஷ சாராய விவகாரத்தில் அமைச்சர் முத்துசாமியை நீக்குவதோடு முதல்வர் மு.க ஸ்டாலின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அழுத்தம் கொடுக்க வேண்டும். விஷ சாராய விவகாரத்தில் ஏராளமான பட்டியல் இனத்தவர்கள் உயிரிழந்துள்ள போதிலும் காங்கிரஸ் மவுனமாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தங்களது கணவனை இழந்த பெண்கள், மகனை இழந்த தாய்கள், தந்தையை இழந்த பெண்கள் அழுகின்ற காட்சிகள் எல்லாம் அனைவரையும் பேச்சற்றவர்களாக மாற்றியுள்ளது.
கள்ளக்குறிச்சி சம்பவம் முழுக்க முழுக்க மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பேரிடர். கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்தபோது உயிர்களைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, இந்த விஷயத்தை மூடி மறைக்கும் முயற்சியில் அரசு நிர்வாகம் ஈடுபட்டது. இதுவே மேலும் பல உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்பு முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் போலீசாரால் விடுவிக்கப்பட்டதற்கான தரவுகள் உள்ளன.
அரசியல் ஆதரவு மற்றும் சட்டம் - ஒழுங்கு அமைப்பில் ஊழல் காரணமாக இது போன்று நடந்திருக்க கூடும். இவற்றை எல்லாம் பார்க்கும் போது, இது அரசு ஆதரவுக் கொலை என அழைக்கலாமா? பொதுவாழ்வு மற்றும் நிர்வாகத்தில் உங்களுக்கு உள்ள அனுபவத்தின் அடிப்படையில் நீங்களும் இதே முடிவுக்கு வருவீர்கள் என நம்புகிறேன். ஆனால் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக தலைமையிலான அரசின் வெட்ககேடான செயல்பாடுகள் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். ஊழல் அதிகாரிகளை பாதுகாப்பதற்கு பதிலாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வெண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ராகுல், பிரியங்க்கா காந்த நேரில் சந்திக்குமாறு மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்த வேண்டும். இந்த பிரச்சினையில் காங்கிரஸ் மவுனம் காப்பதற்கு பதிலாக தைரியமாக குரல் எழுப்ப வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications