ராகுல் காந்தி ஆபத்தானவர், நாட்டை அழிக்க பார்க்கிறார்! ஹிண்டன்பர்க் அறிக்கையால் கங்கனா ரனாவத் ஆவேசம்
டெல்லி: ஹிண்டன்பர்க்கின் சமீபத்திய அறிக்கை பெரும் புயலை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தியை, பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத் சரமாரியாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க்' கடந்த ஆண்டு அதானி குழுமம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. 413 பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமம் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருந்ததாக குற்றம்சாட்டியிருந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட காலகட்டத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் அபரிமிதமாக வளர்ந்தன என்றும், பங்கு மதிப்புகளை அதிகரிக்க போலி நிறுவனம் தொடங்கப்பட்டு, அந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளன எனவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக அதானி குழுமத்தின் சொத்து மதிப்பை ஹிண்டன்பர்க் குறிப்பிட்டிருந்தது. அதாவது தற்போது அதானியின் சொத்து மதிப்பு ரூ.9.84 லட்சம் கோடி. இதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்படும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.8.2 லட்சம் கோடி சொத்து சேர்ந்திருக்கிறது. மொத்த சொத்தில் இது முக்கால்வாசியாகும். இதுமட்டும் இல்லாமல் இந்த காலத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 819% வளர்ச்சியடைந்திருக்கின்றன. இதைத்தான் ஹிண்டன்பர்க் ஆதாரமாக குறிப்பிட்டிருக்கிறது.
இந்த அறிக்கையை மேற்கோளிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்த நிலையில், பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையமான 'செபி' விசாரணையில் இறங்கியது. ஆனால், அதானி நிறுவனம் எந்த முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என்று செபி, கூறிவிட்டது. இப்படியான ஹிண்டன்பர்க் அறிக்கையின் சலசலப்புகள் ஓய்ந்தன.
ஆனால், ஹிண்டன்பர்க்கோ இத்துடன் நின்றுவிடாமல் செபி-அதானி உறவு குறித்து அறிக்கையை வெளியிட்டது. “எங்களது ஆய்வில் குறிப்பிட்ட அதானி குழுமத்தின் சந்தேகத்திற்குரிய பங்குதாரர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கைகளை எடுக்க செபி விரும்பவில்லை. அதாவது இந்தியா இன்போலைனின் “இ.எம். ரீசர்ஜண்ட் பண்ட் மற்றும் இந்தியா ஃபோக்கஸ் ஃபண்ட்” நிறுவனம் மூலம் இயக்கப்படும் அதானியின் சந்தேகத்திற்குரிய மற்ற பங்குதாரர் நிறுவனங்களுக்கு எதிராக செபி இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கு செபியின் தலைவர் மாதவி பூரி புச், கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி பயன்படுத்திய அதே நிதியைப் பயன்படுத்துவதில் உடந்தையாக இருப்பது காரணமாக இருக்கலாம். அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனம் ஒன்றில், செபியின் தலைவராக இருக்கும் மாதவி பூரி புச் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்துள்ளார்” என்று செபி மீது குண்டை வீசியது.
இதனையடுத்து இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று இந்தியா கூட்டணி கட்சிகள் வலியுறுத்த தொடங்கியுள்ளன. இந்நிலையில் பாஜக எதிர் விமர்சனத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத், ராகுல் காந்தியை அவமானத்தின் சின்னம் என்றும், விஷமி எனவும் விமர்சித்துள்ளார்.
தனது x பதிவில், “ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர், அழிவுகரமானவர், விஷமி. தான் பிரதமராக முடியாவிட்டால் இந்த தேசத்தையும் அழித்துவிடலாம் என்பதே அவரது செயல்திட்டம். தேசத்தின் பாதுகாப்பையும் பொருளாதாரத்தையும் சீர்குலைக்க அவர் எல்லா முயற்சிகளையும் செய்கிறார்.
நமது பங்குச் சந்தையை குறிவைத்து வெளியிடப்பட்ட ஹிண்டன்பெர்க் அறிக்கை, ராகுல் காந்தி ஆதரவுடன் வெளியானது என்பது நேற்று இரவு உறுதியானது. ராகுல் காந்தி உங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சியில் அமர தயாராகுங்கள், நீங்கள் எப்படி துன்பப்படுகிறீர்களோ, அந்த வகையில் இந்த தேசத்தின் மக்களின் பெருமை, வளர்ச்சி மற்றும் தேசியத்தை அனுபவிக்க தயாராகுங்கள். மக்கள் உங்களை ஒருபோதும் தலைவராக்க மாட்டார்கள். நீங்கள் ஓர் அவமானம்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஏற்கெனவே இந்த விவகாரம் குறித்து பேசியிருந்த பாஜக எம்பி ரவி பிரசாத், காங்கிரஸ் நாட்டின் பொருளாதாரத்தை முடக்குகிறது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications