கர்நாடக ஹைகோர்ட் தவறான வழியில் சென்றுவிட்டது! ஹிஜாப் தடையை நீக்கிய நீதிபதி.. தீர்ப்பில் சொன்னது என்ன
டெல்லி: கர்நாடக ஹைகோர்ட் தவறான வழியில் சென்றுவிட்டதாக ஹிஜாப் தடையை ரத்து செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதி சுஷாந்து துலியா தெரிவித்துள்ளார்.
கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடரும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 15ம் தேதி தீர்ப்பு வழங்கியது. ஹிஜாப் என்பது அடிப்படை மத உரிமைகளில் சேராது. இது இஸ்லாமில் உள்ள அடிப்படை பழக்க வழக்கங்களில் ஒன்று கிடையாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. இதனால் கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடரும்.

இதற்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மொத்தம் 23 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் சில மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் பெட்டிஷன் மனுக்கள் ஆகும்.
இந்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் நீதிபதி சுதான்ஷு துஹியா ஆகியோர் அமர்வு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வாழங்கப்பட்டது.
ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. மேல்முறையீட்டு மனுவை நீதிபதி ஹேமந்த் குப்தா தள்ளுபடி செய்துள்ளார்.

கர்நாடக ஹைகோர்ட் ஹிஜாப்பிற்கு விதித்த தடை சரி என ஹேமந்த் குப்தா தீர்ப்பு வழங்கி உள்ளார். அதே சமயம் கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பை தள்ளுபடி செய்தார் நீதிபதி சுஷாந்து துலியா. அதாவது ஹிஜாப் தடை செல்லாது என்று அவர் தீர்ப்பு வழங்கி உள்ளார்.
இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 3 நீதிபதி அல்லது 5 நீதிபதி அமர்வுக்கு வழக்கு மாற்றம் செய்யப்படும். இந்த வழக்கில் ஹிஜாப் தடை செல்லாது உச்ச நீதிமன்றம் நீதிபதி சுஷாந்து துலியா தீர்ப்பு வழங்கி இருக்கிறார். இந்த தீர்ப்பில் அவர் முக்கியமான சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அதில், நான் கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உள்ளேன். ஹிஜாப் மீதான தடையை நீக்கி உள்ளேன். என்னுடைய மனதில் இருந்த கேள்விகள் எல்லாமே.. ஹிஜாப் தடை காரணமாக மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்று மட்டுமே நான் நினைத்தேன்.
இந்த தடை காரணமாக அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏதாவது ஏற்பட போகிறதா? இதுதான் என்னுடைய மனதில் இருந்தே ஒரே கேள்வி. ஹிஜாப் அணிவது என்பது தனிப்பட்ட தேர்வு. அதை தவிர இதில் வேறு எதுவும் இல்லை.

மத அடிப்படை பழக்க வழக்கம் என்பதில் பிரச்சனைகளை செய்யலாமா என்ற கேள்விதான் எனக்கு எழுந்தது. அதுதான் இந்த தீர்ப்பிற்கு காரணமாக இருந்தது. கர்நாடக ஹைகோர்ட் தவறான வழியில் சென்றுவிட்டது. பெண்கள் பலர் வீட்டு வேலை பார்த்துவிட்டு, அதன்பின் கஷ்டப்பட்டு பள்ளிகளுக்கும் செல்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை இந்த தடை மூலம் நாம் முன்னேற்ற போகிறோமா? அதனால் நான் என்னுடைய தீர்ப்பில் அதை எதிர்த்து இருக்கிறேன்.
சட்ட பிரிவுகள் 19, 25க்கு எதிராக ஹைகோர்ட் தீர்ப்பு இருந்தது. இதற்கு முன் இது போன்ற அடிப்படை உரிமை வழக்குகளில் கொடுக்கப்பட்ட தீர்ப்புகள் அடிப்படையிலேயே தற்போது தீர்ப்பு வழங்கி இருக்கிறேன்.












Click it and Unblock the Notifications