கட்டுமான தொழிலாளர்களுக்கு அடையாள எண் கட்டாயம்.. ஆதார் போல் மத்திய அரசின் அடுத்த பெரிய திட்டம்
டெல்லி: கட்டுமான தொழிலாளர்களுக்கு அடையாள எண் கட்டாயமாக்கப்பட உள்ளது. இதற்கான திட்டத்தை மத்திய அரசு அடுத்த வாரம் அறிவிக்க உள்ளதாக மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஆர்த்தி அகுஜா தெரிவித்தார்.
நம் நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அன்றாடம் கூலி வேலை செய்யும் மக்களை கொண்ட தொழில்களில் முக்கியமானது கட்டுமான தொழில் தான். இந்தியா முழுவதும் இந்த தொழிலில் பல லட்சம் பேர் ஈடுபடுகிறார்கள். அதிகம் பேர் கட்டுமான தொழிலாளர்களாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு செல்கிறார்கள். குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, டெல்லி போன்ற மாநிலங்களுக்கு புலம் பெயர் தொழிலாளர்களாக செல்கிறார்கள்.

இப்படி புலம் பெயர் தொழிலாளர்களாக செல்லும் மக்களுக்கு சரியான ஊதியம், பணிபாதுகாப்பு, அடிப்படை வசதிகள் கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறைந்த ஊதியத்துடன், விடுமுறை கூட எடுக்காமல் பணி புரிகிறார்கள். அவர்களுக்கு பணி பாதுகாப்பு மட்டுமல்ல, காப்பீடு உள்ளிட்ட எந்த பலனும் இல்லை. இந்நிலையில் கட்டுமான தொழிலாளர்களுக்காக புதிய திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.
இந்த திட்டப்படி கட்டுமான தொழிலாளர்களுக்கு அடையாள எண் கட்டாயம். கட்டுமான தொழிலில் ஈடுபடுவோர் அனைவருக்கும் தனித்துவ அடையாள எண் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வரப்போகிறது. ஆதார் போல் மிகப்பெரிய திட்டமாக இந்த திட்டம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் இடம்பெயர் தொழிலாளர் மாநாடு அண்மையில் நடந்தது. அதில், மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஆர்த்தி அகுஜா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நாடு முழுவதும் கட்டிட மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் தனித்துவ அடையாள எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்மூலம் இடம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.அந்த எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும். அப்படியே 'இ-ஷ்ரம்' தகவல் தொகுப்பில் ஒருங்கிணைக்கப்படும். கட்டுமான தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம், தங்குமிடம், கழிவறை போன்ற வசதிகளை ஏற்படுத்தி தருவது, ஒப்பந்ததாரர்களின் கடமை ஆகும். இத்திட்டம் பற்றிய விவரங்கள், அடுத்த வாரம் வெளியிடப்படும்" இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்காக அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. இதில் அவர்களுக்கு அரசின் சார்பில் நிதி உதவி, கல்வி உதவி தொகை உள்பட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications