Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி பேசியவுடன் கிளம்பிய பாஜக எம்பிக்கள்! 5% அட்டெண்டன்ஸ் .. லோக்சபாவில் முதல்முறை - தயாநிதி ஆதங்கம்

குறைந்தபட்ச உறுப்பினர்கள் இல்லாததால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது இதுவே முதல் முறை என்று திமுக எம்பி தயாநிதிமாறன் தெரிவித்து உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குறைந்தபட்ச உறுப்பினர்கள் கூட இல்லாததால் நாடாளுமன்ற மக்களவை ஒத்திவைக்கப்பட்டது தனக்கு தெரிந்து இதுவே முதல் முறை என்று திமுக எம்பி தயாநிதிமாறன் தெரிவித்து உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் உரையை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் பெரும்பாலானோர் அங்கிருந்து புறப்பட்டதால் 10% உறுப்பினர்கள் கூட இல்லை என்று அவர் கூறினார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 - 2024 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினர். அப்போது காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அதானி விவகாரம் குறித்து பேசினர்.

பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

இதனை தொடர்ந்து இன்று பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றினார். அப்போது காங்கிரஸ் கட்சியையும் அதன் ஆட்சிகாலத்தையும் அவர் கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் தனது உரையில், "கடந்த 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் ஒவ்வொரு வாய்ப்புகளும் சிக்கல்களாக மாற்றப்பட்டதே காங்கிரஸ் ஆட்சியின் முத்திரை.

 காங்கிரஸை விமர்சித்த மோடி

காங்கிரஸை விமர்சித்த மோடி

2014 ஆம் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டுகள் என்பது தோல்வியடைந்த காலமாக அறியப்படுகிறது. அதே நேரம் 2030களின் 10 ஆண்டு காலம் இந்தியாவின் காலமாக இருக்கும் என்பதை நம்மால் மறுக்க முடியாது. 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இந்திய இளைஞர்களின் ஆற்றலை உலகிற்கு காட்டுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தன. ஆனால், ஊழலின் காரணமாக இந்தியா பிரபலமின்றி போனது." என்றார்.

 புறப்பட்ட பாஜக எம்பிக்கள்

புறப்பட்ட பாஜக எம்பிக்கள்

பிரதமர் நரேந்திர மோடியின் உரையை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் பெரும்பாலானோர் அங்கிருந்து புறப்பட்டனர். இதனால் மக்களவையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இந்த நிலையில் 10 சதவீதத்துக்கும் குறைவாக உறுப்பினர்கள் எண்ணிக்கை இருந்ததாக திமுக எம்பி தயாநிதிமாறன் சுட்டிக்காட்டினார். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

தயாநிதிமாறன் பேட்டி

தயாநிதிமாறன் பேட்டி

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியறிக்கை பற்றி எதிர்க்கட்சிகள் கருத்து கூறும்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக டிஆர் பாலு அவர்கள் பேசினார்கள். அவர் பேசிய பிறகு நான் எழுந்து இந்த நாடாளுமன்ற அவையில் கோரம் இல்லை என்ற கருத்தை கூறினேன்.

கோரம் இல்லை

கோரம் இல்லை

கோரம் என்றால் குறிப்பிட்ட அவை நடக்கும்போது நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள நபர்களில் 10 சதவீதம் வரை அவையில் இருக்க வேண்டும். அவ்வாறு அவையில் இருந்தால் மட்டுமே அவை நடத்தப்பட வேண்டும். ஆனால், இந்த முறை 10 சதவீதத்துக்கும் குறைவாக வெறும் 5 சதவீத உறுப்பினர்கள் மட்டுமே அவையில் இருந்தார்கள்.

நிதியமைச்சரும் இல்லை

நிதியமைச்சரும் இல்லை

குறிப்பாக ஆளும் பாஜகவை சேர்ந்த யாருமே அவையில் இல்லை. ஏனென்றால் பிரதமர் நரேந்திர மோடி பேசிய பிறகு அனைவருமே அவையை விட்டு சென்றார்கள். இன்னும் வருத்தம் தரக்கூடிய விசயம் என்னவென்றால் மூத்த அமைச்சர்கள் கூட இங்கே இல்லை. குறிப்பாக பட்ஜெட் பற்றி பேசும்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமர்ந்து இருக்க வேண்டும், அவரும் இல்லை.

இதுவே முதல்முறை

இதுவே முதல்முறை

நிதித்துறை இணை அமைச்சர் ஒருவர் மட்டுமே இருந்தார். இது மிகவும் வருந்தத்தக்க சம்பவம். நான் 3 வது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன். எனக்கு தெரிந்து இவ்வாறு லோக் சபாவில் கோரம் இல்லாததால் குறைந்தபட்ச உறுப்பினர்கள் இல்லாததால் அவை ஒத்திவைக்கப்பட்டது இதுவே முதல் முறை. இது வருந்தத்தக்க சம்பவம் என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+