Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே நாடு ஒரு தேர்தல்..காங்கிரஸ் தயங்கியதை தைரியமாக செய்த பாஜக! தேர்தல் அறிக்கையில் அதிரடி ஆக்‌ஷன்.!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளான இன்று வெளியிட்டு இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

சங்கல்ப் பத்ரா என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த தேர்தல் அறிக்கையில் எதிர்பார்த்தது போலவே பல அதிரடியான அறிவிப்புகள் இடம் பெற்று இருக்கின்றன. ஏற்கனவே கணித்தபடி ஒரு புதிய அஸ்திரத்தையும் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்திருக்கிறது.

Lok Sabha Election 2024 BJP Election Manifesto Announced one nation one election has been made in one country

நாடாளுமன்ற தேர்தல்: நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. மூன்றாவது முறையாக இந்தியாவில் ஆட்சி அமைக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியும் 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணி என்ற பெயரிலும் களம் காண்கிறது. தேர்தல் என்றாலே கட்சிகளின் கதாநாயகனாக கருதப்படுவது தேர்தல் அறிக்கைகள் தான்.

காங்கிரஸ் கட்சி: அந்த வகையில் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில் பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளும், வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு, வளர்ச்சியை நோக்கிய திட்டங்கள் என பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்று இருக்கின்றன. இந்த நிலையில் பாஜகவும் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பல மாதங்களாகவே பாஜக உழைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

பாஜக அறிக்கை: மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் தலைமையில் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பாளர்களாக இடம் பெற்று இருக்க, 27 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு இந்த பணியில் ஈடுபட்டிருந்தது. இதில் இஸ்லாமியர்கள் சீக்கியர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர். நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்து ஆய்வுகளுக்கு பிறகு தற்போது பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ஏற்கனவே இடம் பெற்று வரவேற்பு பெற்ற பாஜகவின் திட்டங்களுக்கு கூடுதலாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

என்னென்ன திட்டங்கள்: முத்ரா திட்டத்திற்கு கடனுதவி 20 லட்சமாக உயர்வு, 70 வயது மேற்பட்டவர்களுக்கு ஐந்து லட்சம் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட திட்டங்களோடு, வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற எண்ணத்தில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாகவும் மோடியின் கேரண்டி 2024 என்ற பெயரில் இந்த தேர்தல் அறிக்கையானது வெளியிடப்பட்டிருக்கிறது. நான்கு திசைகளை நோக்கியும் புல்லட் ரயில் உள்ளிட்ட பல்வேறு எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் இதில் இடம் பெற்று இருக்கின்றன.

ஒரே நாடு தேர்தல் நாடு: பாஜக தனது ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் ஒரு அதிரடியான விஷயத்தை செயல்படுத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த அறிக்கையிலும் ஒரு அதிரடியான அறிவிப்பு இடம் பெற்று இருக்கிறது. அது ஒரே நாடு ஒரே தேர்தல். நாடு முழுவதும் பல்வேறு தேர்தல் நடைபெறுவதால் செலவும் கால விரயமும் ஏற்படுகிறது என பாஜக கூறி இருந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தலில் நடத்த தயார் என இந்திய தேர்தல் ஆணையமும் அறிவித்திருந்தது. இதை அடுத்து பாஜக ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகளை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவை அமைத்தது. அந்தக் குழுவும் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்த நிலையில் தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்படும் என்ற அறிவிப்பை பாஜக தனது தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்திருக்கிறது.

எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு: இது இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வந்திருக்கின்றனர். ஆனாலும் அதனையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்படும் என பாஜக அறிவித்திருப்பது தான் இந்த தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் வெளியான பாஜகவின் தேர்தல் அறிக்கைகளில் பல்வேறு திட்டங்கள் இடம் பெற்று இருந்தன.

பாஜக அதிரடி: குறிப்பாக காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு நீக்கப்படும், சி ஏ ஏ சட்டம் அறிமுகப்படுத்தப்படும், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்று இருந்தன, அதை எதிர் கட்சிகளும் கடுமையாக விமர்சித்து இருந்த நிலையில் தற்போது அவை அமலுக்கு வந்திருக்கின்றன. ஒரு சில மாநிலங்கள் சிஏஏ சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும் சில மாநிலங்களில் அவை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது, காஷ்மீரின் அந்தஸ்தை நீக்கியது, காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரித்தது என பல அதிரடிகளை பாஜக செய்து முடித்து இருக்கிறது. அந்த வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அஸ்திரத்தை பாஜக கையில் எடுத்திருக்கும் நிலையில் இது பேசு பொருளாகி இருக்கிறது


தயங்கிய காங்கிரஸ்: இதற்கு முன்னர் காங்கிரஸ் கொண்டு வந்த ஜிஎஸ்டி உள்ளிட்ட சில திட்டங்களை மாறுதல்களோடு பாஜக அறிமுகப்படுத்தி இருந்தாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் போன்றவற்றை காங்கிரஸ் அரசு செய்ய தயங்கியது. ஆனால் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அதிரடி காட்டும் பாஜக தற்போதும் அதே பாணியை கையில் எடுத்து எதிர்க்கட்சிகளை கலங்கடித்து இருக்கிறது. அதனுடைய அறிவிப்புகளோடு மட்டுமல்லாமல் பல்வேறு திட்டங்களும் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று இருக்கும் நிலையில் மக்களின் கவனத்தைப் பெற்று மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி கட்டிலில் அமருமா என்பதுதான் பாஜகவினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+