"பாஜகவுத்தான் ஓட்டு" நியூஸ் 18 கருத்துக் கணிப்பில் 85% பேர் கருத்து! காரணம் என்ன தெரியுமா?
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பீர்கள் என நியூஸ் 18 சிஎன்என் நடத்தி கருத்துக் கணிப்பில் கேட்ட கேள்விக்கு பிரதமர் மோடிக்காகவே பாஜகவுக்கு வாக்களிப்போம் என 85 சதவீதம் பேர் பதிலளித்துள்ளனர். இதன் முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.
நியூஸ் 18 சிஎன்என் தேர்தலுக்கு முந்தைய ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. அந்த கருத்துக் கணிப்புகளின் முடிவுகளில் பெரும்பாலானோர் பிரதமர் மோடியை ஆதரித்ததாகவே தெரிகிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள், ஏன் வாக்களிப்பீர்கள், யார் சிறந்த தலைவர் போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு பெருவாரியான மக்கள் தங்கள் பதில்களை அளித்துள்ளனர். அவ்வாறு கேட்ட போது, யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு பலரும் ஆச்சரியப்படும் அளவுக்கு பதில் அளித்துள்ளனர்.
பாஜகவுக்குத்தான் ஓட்டு போடுவோம் என 85 சதவீதம் பேர் கூறியுள்ளனர். எதற்காக என கேட்டதற்கு பிரதமர் மோடிக்காகவே வாக்களிப்போம் என தெரிவித்துள்ளனர். உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை கருத்தில் கொண்டுதானே வாக்களிப்பீர்கள் என கேட்டதற்கு எங்கள் தொகுதியில் யார் வேட்பாளராக இருந்தாலும் சரி நாங்கள் மோடிக்காக பாஜகவுக்குத்தான் வாக்களிப்போம் என்றனர்.
அது போல் யார் நேர்மையாளர் என கேட்டதற்கு 73 சதவீதம் பேர் பிரதமர் மோடிதான் தெரிவித்துள்ளனர். அதாவது ராகுலை விட பிரதமர் மோடிதான் நேர்மையாளர் என கருத்து கணிப்புகளின் முடிவுகள் வந்துள்ளன. ராகுல் காந்தியை விட பிரதமர் மோடி கடின உழைப்பாளி என 69 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள்.
பீகார் லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 38 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெல்லும் 2 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கூட்டணி வெல்லும் என கணிப்புகள் வெளியாகியுள்ளன
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும். இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பிரதமர் மோடியும் ஆட்சியை பிடிக்க ராகுல் காந்தியும் போராடி வருகிறார்கள்.
இந்த கருத்துக் கணிப்புகள் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாவதற்கு முன்பு எடுக்கப்பட்டிருக்கலாம். தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்து வருகின்றன. எனவே இந்த சட்டத்தால் தேர்தல் முடிவுகளில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications