"நிம்மதி.." வடமாநிலங்களை ஸ்தம்பிக்க வைத்த லாரி ஓட்டுநர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்! என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வடமாநிலங்களில் ஹிட் அண்ட் ரன் சட்டத்திற்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக லாரி ஓட்டுநர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சிவில் கேஸ்களுக்கு பொது சிவில் சட்டம் என நாம் வலியுறுத்துகிறோம். அதேநேரம் கிரிமினல் வழக்குகளுக்கு நமது நாட்டில் எப்போதும் ஒரே சட்டம் தான் இருந்துள்ளது.

Lorry drivers strike over hit-and-run law ends after meeting with government

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை அடிப்படையில் தான் கிரிமினல் வழக்குகள் கையாளப்பட்டு வந்தது. இருப்பினும், இது ஆங்கிலேயர்கள் காலனித்துவ ஆட்சியைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி புதிய சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த புதிய சட்டத்தில் இடம்பெற்ற ஒரு சட்டம் இப்போது போராட்டத்திற்குக் காரணமாக அமைந்தது. புதிய விதியின்படி ‛ஹிட் அன்ட் ரன்' அதாவது விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகன டிரைவருக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது ரூ.7 லட்சம் அபராதம் விதிக்க முடியும். ஐபிசி சட்டத்தில் இதற்கு2 ஆண்டு வரை மட்டுமே சிறைத் தண்டனை விதிக்க முடியும். ஆனால் இப்போது அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்.

மத்தி. அரசு ஓட்டுநர்கள் தரப்பில் எந்தவொரு ஆலோசனையும் இல்லாமல் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துவிட்டனர் என்பதே இதை எதிர்க்க முக்கிய காரணமாக இருந்தது. மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனக்கூறி லாரி டிரைவர்கள் நாடு முழுவதும் ஸ்ட்ரைக் அறிவித்துள்ளனர்.

வடமாநிலங்களில் இன்று இந்த போராட்டம் மிக தீவிரமாக நடைபெற்றது. இதன் காரணமாக வடமாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. லாரிகளில் தான் பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்லப்படும் என்பதால் எங்கே பெட்ரோல், டீசல் சப்ளை பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் பெட்ரோல், டீசலை நிரப்ப பெட்ரோல் பங்குகளில் குவிந்தனர். இதனால் வடமாநிலங்களில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு அதிகாரிகள் லாரி ஓட்டுநர்கள் தரப்பினருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். டெல்லியில் இன்று இரவு 7 மணிக்குத் தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை சில மணி நேரம் வரை நீட்டித்தது. இதற்கிடையே வடமாநிலங்களில் நடந்து வந்த லாரி ஓட்டுநர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய குற்றவியல் சட்டத்துக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. லாரி ஓட்டுநர்கள் விரைவில் பணிக்குத் திரும்ப உள்ளனர். 10 ஆண்டு தண்டனை வழங்கும் பிரிவைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு உறுதி அளித்தாகவும் அதன் பிறகே தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக லாரி ஓட்டுநர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+